சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு

184 0

தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும ஜெட்வேகத்தில் உயர்ந்து 100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்பு, கனமழை காரணமாக காய்கறி வரத்து குறைவு ஆகிய இரண்டும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.சென்னை - கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.100 ஆக உயர்வு | Tomato  Price Hiked to Rs.100 Per KG on Chennai - Koyambedu Market - hindutamil.in

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை காய்கறி சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து காய்கறிகள் வருகின்றன. மழை மற்றும் விவசாய இடங்களில் இருந்து காய்கறிகளை கொண்டுவர முடியாத நிலையால் கடந்த சில நாட்ளாக தக்காளி விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. வரத்தை பொறுத்து விலை ஏற்றம் இறக்கம் இருந்து வந்தது.

வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 1200 டன் தக்காளி வரும் என வியாபாரிகள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. நேற்று கிலோ 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 15 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் சில்லறை விலையில் 120-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இஞ்சி- 220 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம்- 150 ரூபாய்க்கும், பட்டாணி- 200 ரூபாய்க்கும், பூண்டு- 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று 550 டன் தக்காளி மட்டுமே வந்ததால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. அசைவப்பிரியர்களே உஷார்..

Posted by - April 17, 2023 0
மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்கள் விலை வரும் நாட்கள் உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க,…

டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் வரும் 17ஆம் தேதி முற்றுகை போராட்டம் – அண்ணாமலை

Posted by - March 14, 2025 0
தமிழக முதலமைச்சரே பதவி விலக வேண்டிய அளவிற்கு டாஸ்மாக் நிறுவன உழல் மிகப்பெரியது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வரும் 17ஆம் தேதி டாஸ்மாக்…

“ராகுல் எம்.பி பதவி பறிப்பை திருமாவளவன் நினைவில் கொள்ள வேண்டும்…”- பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி..!

Posted by - June 12, 2023 0
அரசியல் கட்சித் தலைவர் எப்படி பேசக் கூடாது என்பதற்கு முன் உதாரணமாக திருமாவளவன் இருப்பதாக பாமக வழக்கறிஞர் பாலு விமர்சனம். நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம், சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிட…

திட்டமிட்ட தேதியில் முதுகலை ஆசிரியர் தேர்வு? டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - October 7, 2025 0
TN TRB Hall Ticket 2025 தேர்வர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டு குறித்த குறைகள் இருப்பின் அதைச் சரிசெய்யலாம். அதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேருடன் மிதந்த மதுரை…!

Posted by - May 3, 2023 0
உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *