ஆந்திராவில் திசைமாறிய திருடர்கள்- கடை, தோட்டத்தில் 450 கிலோ தக்காளி கொள்ளை

200 0

திருப்பதி:

தக்காளியின் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தை அடைந்ததால் இல்லத்தரசிகள் தக்காளியை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல் தக்காளியை பயிரிட்டுள்ள விவசாயிகள் பலர் ஒரே மாதத்தில் லட்சாதிபதிகளாகவும்,கோடீஸ்வரர்களாகவும் மாறி உள்ளனர். குறிப்பாக ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் அன்னமய்யா மாவட்டத்தில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு அறுவடை செய்து சந்தைகளில் விற்று லாபம் ஈட்டி வருகின்றனர். தங்கம், வெள்ளி திருடிய திருட்டு கும்பல் தக்காளி பக்கம் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர்.பற்றாக்குறையை சமாளிக்க ஆந்திராவில் இருந்து தக்காளி: இரண்டாம் தரம் விலையே  கிலோ ரூ.85 | Tomatoes are imported from Andhra Pradesh - hindutamil.in

சித்தூர் மற்றும் அன்னமய்யா மாவட்டத்தில் தக்காளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து பணம் பறிக்கும் முயற்சியில் மர்ம கும்பல் ஈடுபட்டு வருகிறது. அன்னமய்யா மாவட்டம் நெக்குண்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். நேற்று மர்ம நபர்கள் இரவோடு இரவாக தோட்டத்தில் புகுந்து 450 கிலோ தக்காளி திருடி சென்றுவிட்டனர். இதேபோல் மதனப்பள்ளி மார்க்கெட் பகுதியில் கடையில் கதவை உடைத்து திருட்டு கும்பல் புகுந்தனர். அங்கிருந்த 50 கிலோ தக்காளியை திருடி சென்றனர். சித்தூர் மாவட்டம் புங்கனூர் அடுத்த நக்க பண்டாவை சேர்ந்தவர் லோகராஜ். இவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் இருந்த தக்காளியை அறுவடை செய்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்தார்.

பின்னர் தக்காளி விற்பனையில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கஞ்சா போதையில் இருட்டான பகுதியில் மறைந்து இருந்த மர்ம நபர்கள் லோகராஜை வழிமறித்தனர். பீர் பாட்டிலால் லோகராஜ் மீது சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.4.50 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து லோகராஜ் புங்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சித்தூர் மற்றும் அன்னமய மாவட்டத்தில் நடைபெறும் தொடர் சம்பவங்களால் தக்காளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Related Post

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் – 25 முறை மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை

Posted by - June 1, 2023 0
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வசித்து வருபவர் ராமானுஜ சாஹு. இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு…

BSNL வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய IFTV திட்டம் – 600+ Live TV சேனல்கள், 75 Mbps இணைய வேகம்!

Posted by - December 15, 2025 0
BSNL (Bharat Sanchar Nigam Limited) தனது FTTH (Fiber To The Home) வாடிக்கையாளர்களுக்காக IFTV (Intranet Fiber TV) என்ற புதிய வசதியை அறிமுகம்…

டிசம்பர் 2024 முடிவதற்குள் கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான 2 வேலைகள்: இதுதான் கடைசி வாய்ப்பு..

Posted by - December 10, 2024 0
இந்த டிசம்பர் மாதத்தின் கடைசி தேதி (டிசம்பர் 31) முடிவதற்குள் ஆதார் (aadhaar) மற்றும் பான் (pan) கார்டு சார்ந்த பணிகளை முடிக்க வேண்டும். குறிப்பாக இலவச…

ஆந்திராவில் தொழிலதிபர், மனைவி வீடு புகுந்து கடத்தல்: ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

Posted by - July 1, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி லட்சுமி. உள்ளூரில் உள்ள ரவுடிகள் ஸ்ரீனிவாசனிடம் அடிக்கடி லட்சக்கணக்கில் பணத்தைக் கேட்டு…

முன்னேறும் பாஜக: தடுமாறும் ‘இ.ண்.டி.யா’

Posted by - February 15, 2024 0
“அரசியலைப் பொறுத்தவரை ‘குடும்பக் கட்டுப்பாட்’டில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை” – சமீபத்தில் ஒரு செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமித் ஷா, கூட்டணி விரிவாக்கம் குறித்து நகைச்சுவையுடன் குறிப்பிட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *