புதுவையில் 2 நாளில் ரூ.30 லட்சம் சுருட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்

409 0

புதுச்சேரி:

புதுவை மூலகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடிக்காரர்கள் கூறினர். இதனை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து 13 ஆயிரத்து 274 செலுத்தினார். அதன்பின் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இதேபோல லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார். அவருக்கு பணம் திரும்பி வரவில்லை. A person who lost Rs 5 lakh to an online fraud gang complained | ஆன்லைன்  மோசடி கும்பலால் ரூ.5 லட்சம் இழந்த நபர் புகார் | Dinamalarவாணரப்பேட்டையை சேர்ந்த பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார். நெல்லித்தோப்பு ரமேஷ் ஆன்லைன் வீடியோவை பார்த்து லைக் செய்தால் பணம் கிடைக்கும் என கூறியதை நம்பி ரூ.1.3/4 லட்சம் செலுத்தி ஏமாந்தார்.

ஏனாம் பிராந்தியம் தீபக்குமார் ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தையை நம்பி ரூ.2 ¾ லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். முத்தியால்பேட்டை பிரபாகரன் பான்கார்டு புதுப்பித்தல் என நம்பி வங்கி தகவலை தெரிவித்ததால் ரூ.24 ஆயிரத்து 986 இழந்தார். இவர்கள் உட்பட கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவை முழுவதும் 19 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர புதுவை நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என நம்பி ரூ.5.72 லட்சம் முதலீடு செய்தார். இந்த நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்டேர் ரூ.2 கோடி வரை செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Post

சனாதனம் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

Posted by - September 7, 2023 0
சென்னை: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த…

சிக்கனில் இந்த பாகத்தை ஒருபோதும் சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சனை இருக்கவங்க தொடவே கூடாது.!

Posted by - December 18, 2024 0
சிக்கனை சிலர் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை சாப்பிடுகிறார்கள், மற்றவர்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை சாப்பிடுகிறார்கள். சிலருக்கு சிக்கன் இல்லாமல் ஒரு…

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின்

Posted by - December 8, 2025 0
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கோயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். சீர்காழி அருகே திருவெண்காட்டில் இந்துசமய…

நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி

Posted by - August 27, 2024 0
யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ். யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தெடார்ந்து சினிமாவில்…

வாழை இலை.. வெயிட் லாஸ் முதல் சரும ஆரோக்கியம் வரை உதவும் அதிசய சாறு.. தலைமுடி வளர்ச்சிக்கு வாழை இலை

Posted by - November 21, 2023 0
சென்னை: வாழையிலையில் உள்ள நன்மைகள் ஏராளம்.. இந்த வாழையிலையை அரைத்து பயன்படுத்துவதால், ஏற்படும் நன்மைகள் அதைவிட ஏராளம்.. அவை என்னென்ன தெரியுமா? வாழையிலையில் உள்ள சத்துக்களை லிஸ்ட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *