மகாராஷ்டிராவில் சோகம் – 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி

233 0

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர் என்றும், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத் குற்றம்சாட்டினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது.மகாராஷ்டிரா | தானே மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் பலி:  விசாரணைக்கு உத்தரவு | 18 dead in 24 hours at Thane hospital, negligence  suspected; probe panel formed ...

இந்நிலையில், அந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரிழந்தவர்களில் சிலர் முதியவர்கள் எனவும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தானே மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பாங்கர் கூறுகையில், கல்வா மருத்துவமனையில் உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள். 8 பேர் ஆண்கள். இந்தச் சம்பவம் குறித்து முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே விசாரித்தார்.

அவர் நோயாளிகள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை ஆணையர் தலைமையில் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார். முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இது சாதாரண விஷயமல்ல. அது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் இறந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

உ.பி.யில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 4 நாளில் 57 நோயாளிகள் பலி: பின்னணி என்ன?

Posted by - June 19, 2023 0
லக்னோ : உத்தரபிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி…

இன்ஸ்டா டூ செப்டிக் டேங்க்..!

Posted by - February 14, 2026 0
திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் குடும்பத்துடன் சேர்ந்து 33 வயது காதலியை கொலை செய்து, உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டியில் பிண வாடையா?: புதிய பரபரப்பு

Posted by - June 10, 2023 0
புவனேசுவரம் : ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3…

அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Posted by - April 15, 2024 0
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அம்பேத்கரின் கொள்கையை உண்மையில் அமல்படுத்தி உள்ளோம். காங்கிரஸ்…

ஆந்திராவில் களை எடுக்கும் போது விவசாய நிலத்தில் கிடைத்த வைர கற்கள் லட்சாதிபதியான பெண் கூலி தொழிலாளி

Posted by - July 17, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தேன் நிறத்திலான கல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *