தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்- திருமண ஆசை காட்டி நண்பனை பெண்ணாக மாற்றிய வாலிபர்

260 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். ஒரே மாதிரி உடை அணிதல், ஒன்றாக சாப்பிடுவது என இருந்து வந்தனர். இந்த நெருக்கம் இருவரிடையே தன்பாலின ஈர்ப்பை ஏற்படுத்தியது.தன்பாலின ஈர்ப்புக்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கிய  பிரிட்டன் - BBC News தமிழ்

அடிக்கடி தனிமையில் சந்தித்து தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டனர். இருவரும் வெவ்வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டால் தனித்தனியாக பிரிந்து விடுவோம் என எண்ணினர். இதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இருக்கலாம் என நாகேஸ்வரராவ் ஆசை வார்த்தை கூறினார். அதன்படி நண்பர்களில் யாராவது ஒருவர் பெண்ணாக மாற வேண்டும் என்றபோது நாகேஸ்வர ராவின் நண்பர் பெண்ணாக மாற ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து நாகேஸ்வரராவின் நண்பர் அறுவை சிகிச்சை மூலம் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டார். பின்னர் நாகேஸ்வரராவிடம் வந்து நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். அப்போது நாகேஸ்வர ராவ் நீ அழகாக இல்லை அதனால் உன்னை திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகேஸ்வரராவின் நண்பர் பெண்ணாக மாறினால் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கிருஷ்ண லங்கா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேஸ்வரராவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

வங்கியை விட அதிக வட்டி – அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 8 சேமிப்புத் திட்டங்கள்

Posted by - January 20, 2024 0
தேசிய சேமிப்பு கால வைப்பு (National Savings Time Deposit) வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு திட்டம் போன்றதே இந்த தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம்.…

லாட்ஜிக்கு நம்பி சென்றதால் விபரீதம்: காதலன், நண்பன் பலாத்காரம் செய்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பால் மேரு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து…

பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த டாக்டர்கள்- ஒரு வருடத்திற்கு பிறகு அகற்றம்

Posted by - April 19, 2023 0
திருப்பதி: மாநிலம் ஜகித்யாலா பகுதியை சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ கடந்த ஆண்டு பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நவ்யா ஸ்ரீக்கு சுகப்பிரசவம் நடக்காததால் டாக்டர்கள்…

ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

Posted by - October 30, 2023 0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து…

வெப்ப அலை எச்சரிக்கை: உரிய முன்னேற்பாடுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Posted by - April 12, 2024 0
புதுடெல்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் பிரதமர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *