கடந்த நிதியாண்டில் ரூ.156 கோடி லாபம் ஈட்டி சென்னை துறைமுகம் சாதனை

191 0

சென்னை:

கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி படைத்துள்ளது என்று துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்து உள்ளார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:- 142 ஆண்டுகள் பழமையான சென்னை துறைமுகம் சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளது.

மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இத்துறைமுகம் இருந்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக கடந்த நிதி ஆண்டில் ரூ. 156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள முக்கிய திட்டங்களை விரைவாக முடித்திட அனைத்து அதிகாரிகளும் உறுதுணையாக இருந்து பணியாற்றி வருகின்றனர்.

சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் வரை அமைக்கப்பட உள்ள ஈரடுக்கு மேம்பால திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேட்டில் ரூ.1400 கோடி மதிப்பீட்டிலான பல்நோக்கு சரக்குகள் கையாளும் முனையம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த ஓராண்டுக்கு முன் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Post

90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?

Posted by - December 3, 2025 0
நாமக்கல்லில் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த பெண்ணால் 34 வயது இளைஞரின் வாழ்க்கை பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது ப.வேலூர். இந்த ஊர் அருகே அமைந்துள்ளது…

தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 3, 2023 0
சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.3) முதல் நவம்பர் 6 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நாளை (நவ.4) மிக கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட்…

சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

Posted by - November 7, 2024 0
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என அதிமுக…

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கவலைக்கிடம்? ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுக்கு என்னாச்சு?

Posted by - December 14, 2024 0
காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை கவலைக்கிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன்…

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : சொந்த வீடு.. கார் என கோடிகளில் புரளப்போகும் ராசிகள்!

Posted by - April 20, 2023 0
guru peyarchi 2023 date : சோபகிருது வருடம் சுசித்திரை மாதம் 9 ஆம் தேதி (ஏப்ரல் 22, 2023) சனிக்கிழமை அன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *