GENERAL NEWS“40 நாட்கள், 8 கட்ட தரையிறக்கம்! சந்திரயான் 3ன் நிலவு பயணம்! தரையிறங்கும் Vikram Lander!”

202 0

சந்திரயான்-3 விண்கலம் 40 நாட்கள் பயணத்தை முடித்து இன்று மாலை நிலவில் தரையிறங்குகிறது. நிலவில் சந்திரயான்-3 பத்திரமாக கால் பதிக்க முக்கியமான பத்து கட்டங்களை கடக்க வேண்டியுள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். தற்போது நிலவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விக்ரம் லேண்டரை 7.4 கிலோமீட்டர் தொலைவுக்குக் கொண்டு வருவது தான் முதல் கட்டம்.

 

 

அப்போது லேண்டரின் வேகம் ஆயிரத்து 200 கிலோமீட்டர் அளவாகக் குறைக்கப்படும். அதில் இருந்து இரண்டாவது கட்டம் தொடங்கும். அப்போது லேண்டர் 7.4 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து 6.3 கிலோமீட்டராக கீழே இறக்கப்படும். அப்போது கிடைமட்டமாக இருக்கும் லேண்டர், தரையிறங்குவதற்கு வசதியாக, 50 டிகிரி கோணத்திற்கு சாய்வாகத் திருப்பப்படும். அதே நிலையில் 6.3 கிலோமீட்டர் தொலைவில் இருந்து 800 மீட்டர் தூரத்திற்கு குறைக்கப்படுவதே மூன்றாவது கட்டமாகும்.

 

 

அடுத்த கட்டத்தில் லேண்டர் 150 மீட்டர் உயரத்திற்கு நிலவின் தரைப் பகுதியை நோக்கி கீழே கொண்டு வரப்படும். அப்போது லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மேடு பள்ளங்களைத் துல்லியமாக கவனித்து, சமதளப் பரப்பைத் தேர்வு செய்யும். பின்பு தேர்வு செய்த பாதுகாப்பான இடத்தில் மெதுவாக தரையிறக்குவதே ஐந்தவாது கட்டமாகும். அறுபது மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திற்கு லேண்டரை கீழே இறக்குவதுதான் ஆறாவது கட்டம்.

 

 

7வது கட்டத்தில் ராக்கெட் எஞ்சின்கள் நிறுத்தப்படும். எஞ்சின்கள் நிறுத்தப்பட்டவுடன் விண்கலம் 10 மீட்டர் உயரத்தில் இருந்து நிலவின் தரைப்பரப்பில் வேகமாக மோதாமல் இருப்பதற்காக லேண்டர் மிக மெதுவாக தரையிறக்கப்படும் கடைசி கட்டமாக நிலவில் தரையிறங்கிய லேண்டர் சுமார் 2 மணி நேரம் அதே நிலையில் நிற்கும். அதன்பிறகு லேண்டரில் இருந்து வெளியே வந்து பிரக்யான் ரோவர் இறங்கி ஆய்வை தொடங்கும்.

Related Post

‘பிரபலங்களுடன் தொடர்பு’ – கைதான ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்ததாக என்சிபி தகவல்

Posted by - March 9, 2024 0
புதுடெல்லி: சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB – என்சிபி) அதிகாரிகள்,…

பிரதமர் மோடிக்கு நன்றி – ரஜினிகாந்த் ட்வீட்…

Posted by - May 28, 2023 0
குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். – இளையராஜா தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.…

மத்திய பிரதேசத்தில் மனைவிகளுக்கிடையே தகராறில் கணவர் மீது துப்பாக்கி சூடு

Posted by - February 20, 2023 0
போபால் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் தாகர்கான். இவருக்கு அஞ்சும், ஹூமாகான் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி அஞ்சும் என்பவருடன்…

புதுவித இணையதள மோசடி: ஏமாறும் சிறுநீரக கொடையாளர்கள்

Posted by - July 5, 2023 0
ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 10 லட்சம் இந்தியர்கள் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 2 லட்சம் பேர் இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பை அடைகிறார்கள். சிலருக்கு…

கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளில் 15,325 விஷ பாம்புகள் பிடிபட்டன

Posted by - February 20, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காடுகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மலைகிராமங்களில் பாம்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. விஷ பாம்புகள் கடித்து பலர் பலியாகி உள்ளனர். இந்த பாம்புகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *