புதுவித இணையதள மோசடி: ஏமாறும் சிறுநீரக கொடையாளர்கள்

310 0

ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 10 லட்சம் இந்தியர்கள் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 2 லட்சம் பேர் இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பை அடைகிறார்கள்.

சிலருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினால் பயன் கிடைப்பதால் சிறுநீரக தானம் அளிக்க முன்வருவோருக்கு அதிக தேவை உருவாகியிருக்கிறது. இதனால் தானம் அளிக்க முன்வருவோரையும், குடும்ப கஷ்டத்திற்காக சிறுநீரகத்தை விற்க விரும்புவோரையும் குறி வைத்து பல மோசடி வேலைகள் நடக்கின்றன. வறுமையில் வாடும் ஒரு பெண், தனது சிறுநீரகத்தை விற்க முன் வந்திருக்கிறார்.தனியார் வைத்தியசாலை சிறுநீரக மோசடி- சம்மந்தப்பட்டவர்களுக்கு பயண தடை

அவரின் இணையவழி தேடலில் ஒரு முகநூல் பக்கம் அவருக்கு பதிலளித்து, ரூ.10 லட்சத்திற்கு அதனை வாங்க விரும்புவதாகவும், ஆனால் முன்பணமாக ரூ.8 ஆயிரம் அவர் செலுத்த வேண்டும் என பதிலளித்திருக்கிறது. ஒரு மருத்துவமனையின் பெயரையும் கொடுத்து, பணத்தை இணையவழியில் செலுத்தி விட சொல்லி அவசரப்படுத்தியிருக்கிறது.

பணம் செலுத்தும் முன், கொடுக்கப்பட்ட எண்ணை அவர் தொடர்பு கொண்டார். மோகன் அறக்கட்டளை எனும் லாபநோக்கமற்ற அந்த அமைப்பின் எண்ணை தொடர்பு கொண்டபோது, அவர்கள் பணம் எதுவும் வழங்குவதில்லை என தெரிவித்திருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக அப்பெண்மணி தான் ஏமாற்றப்படுவதிலிருந்து தப்பித்தார்.

ஆனால், அவரை போன்ற ஆயிரக்கணக்கானோர் இவற்றை நம்பி பணத்தை இழந்திருக்கின்றனர். இத்தகைய மோசடிகள் பரவி வருகிறது என மோகன் அறக்கட்டளை தெரிவிக்கிறது. பிரபலமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பெயர்களை போலி இடைத்தரகர்கள் பயன்படுத்தி பல அப்பாவிகளை தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

நலிவடைந்து வரும் பொருளாதார சூழ்நிலையில், மக்களில் பெரும்பானோர் தங்கள் வேலைகளை இழந்து, வருமானம் குறைந்ததால், பலர் தங்கள் உறுப்புகளை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. சிறுநீரக பரிமாற்றம் உண்மையில் நடைபெறுகிறதா, இல்லையா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், அவர்களின் இணையவழி மற்றும் முகநூல் தேடலின் தகவல் பரிமாற்றத்தில் முதலில் கட்ட வேண்டிய தொகை என கேட்பதை பலர் மிகவும் சிரமப்பட்டு கட்டி விடுகின்றனர். ஏற்கெனவே பொருளாதார சிக்கலில் உள்ள அவர்கள், பணத்தை இழந்து, மேலும் கடனில் விழுகின்றனர்.

இது குறித்து முகநூல் தளம் நடத்தும் மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “உறுப்பு கடத்தல் மற்றும் மோசடிகள் உள்ளிட்ட மனித சுரண்டலுக்கு தாங்கள் எதிரானவர்கள். இதற்காக தெளிவான விதிகளை வகுத்திருக்கிறோம். மோசடி செய்பவர்கள் மிகவும் அதிநவீனமாக வளர்வதால், முதலீடுகளினாலோ, தொழில்நுட்பங்களினாலோ மட்டும் முகநூல் போன்ற பெரும் தளங்களில் நடைபெறும் மோசடியை 100% தடுக்க முடியாது,” என்று தெரிவித்திருக்கிறார். பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகாரளிக்க முன்வராததால் காவல்துறையால் இதில் எதுவும் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Post

கேரளாவில் வேலையில்லா திண்டாட்டம்: அரசு பியூன் வேலைக்காக குவிந்த என்ஜினீயர்கள்- பி.டெக் பட்டதாரிகள்

Posted by - October 28, 2023 0
கொச்சி: இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம் என பெயர் பெற்ற கேரளாவில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகமாக இருப்பதை அங்கு நடந்த ஒரு சம்பவம் எடுத்து…

படிக்கும் காலத்தில் இது தேவைதானா என எதிர்ப்பு- கல்லூரி காதல் ஜோடி திருமணம் செய்துவிட்டு தற்கொலை

Posted by - August 21, 2023 0
திருப்பதி: ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டம், செட்டேவாரி பள்ளியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். லதிகம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது வாலிபர். இருவரும் புங்கனூரில் உள்ள…

செய்தியாளரிடம் கூகுள் பண்ணச் சொன்ன பும்ரா- பதில் அளித்த சுந்தர் பிச்சை

Posted by - December 20, 2024 0
மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது. செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

இனி சைலண்ட் ரூட் செட் ஆகாது – தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை, கூட்டாளிகளை பலப்படுத்த முடிவு

Posted by - May 16, 2025 0
ஆஃப்கானிஸ்தான் தாலிபன் அரசின் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியாவால் அங்கீகரிக்கப்படாத தாலிபன் அரசு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்…

5 நிமிட ஜாலிக்காக இது தேவையா!! போலீஸார் செய்த தரமான செயல் – இணையத்தில் வைரலாகிய வீடியோ!

Posted by - August 28, 2023 0
இணைய மோகம் யாரை தான் விட்டு வைத்தது. உயர் தரத்திலான கேமராக்களை கொண்ட மொபைல் போன்கள் வந்த பிறகு அன்றாட வாழ்நாளில் செய்யும் அனைத்தையும் காட்சிப்படுத்தி இணையத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *