தல அஜித் ரசிகர்களுக்கு மேலும் வந்த சூப்பர் செய்தி அதை பற்றி பார்ப்போம்..லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் கடந்தாண்டு கமிட் ஆன திரைப்படம் தான் Ak62…இந்த படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது… #ajith #thala #thunivu #vidamuyarchiupdate #tamiltrending #tamilnews #tamilupdate #tamilcinema #cinemanews #pixeltv #pixelmedia
இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கடந்தாண்டு மார்ச் மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது இதன் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே நடந்தது.இப்படத்தின் ஷூட்டிங்கை விக்னேஷ் சிவன் கடந்த ஜனவரி மாதம் தொடங்க இருந்த நேரத்தில் அவரை இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது லைகா நிறுவனம்.
கடந்த மே மாதம் 1-ந் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று மகிழ் திருமேனி இப்படத்தில் கமிட் ஆனதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா நிறுவனம் இப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிட்டு உள்ளதாகவும் அறிவித்தனர்.

மே மாதம் வந்த அறிவிப்புக்கு பின் விடாமுயற்சி படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை. கடந்த மூன்று மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு இப்போ ஆரம்பமாகிவிடும், அப்போ ஆரம்பமாகிவிடும் என தகவல் கசிந்தாலும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் விடாமுயற்சி அப்டேட் கேட்டு வருகின்றனர்.
சமீபத்தில் இப்படம் Drop என சொல்லவும் பட்டது ஆனால் இப்போது சூப்பர் அப்டேட் வந்துள்ளது அதன்படி இந்த படத்தை ட்ராப் செய்ய வாய்ப்பே இல்லை என சொல்லியுள்ளனர்.அதனை போல லைக்கா சுபாஷ்கரன் இது முக்கிய படம் என சொல்லியுள்ளார்.