ஆன்லைன் நிறுவன இணையத்தை முடக்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திரா வாலிபர்

255 0

பெங்களூரு:

தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியுடன் தொடர்புடைய தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. அந்த கூப்பன்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி அந்த நிறுவனத்தின் இணையதளத்தின் சர்வரை முடக்கி தங்கம், வெள்ளி, மோட்டார் சைக்கிள்கள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்கி மர்ம நபர் ஒருவர் மோசடி செய்தார்.இரட்டிப்புத் தொகை தருவதாக கூறி நாகையில் மீனவர்களிடம் ரூ.8.14 கோடி மோசடி -  நிதி நிறுவன இயக்குநர்கள் தலைமறைவு | 8.14 Crore fraud to fishermen in Nagai  by claiming ...

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் சார்பில் தென்கிழக்கு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தனியார் வங்கியின் தொடர்புடைய இணையதளத்தின் சர்வரை முடக்கி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த லட்சுமிபதி (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

புகழ் பெற்ற ஒரு கல்லூரியில் கணினி அறிவியலில் பி.டெக் படித்துள்ள லட்சுமிபதி ஹேக்கராக செயல்பட்டு வந்துள்ளார். இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையத்தை முடக்கி, வாடிக்கையாளர்களின் பரிசுக்கூப்பன்களை திருடி பொருட்களை வாங்கி குவித்துள்ளார். மேலும் பரிசுக்கூப்பன்களுக்கு வழங்கப்படும் வெகுமதி புள்ளியை (ரிவார்டு பாயிண்ட்) பணமாக மாற்றி உள்ளார்.

இந்த கூப்பன்களை கணிசமான அளவு டிஜிட்டல் கரன்சியாக மாற்றியுள்ளார். இதில் அவர் வாங்கி குவித்த 5 கிலோ தங்க நகைகள், தங்க கட்டிகள், வெள்ளி பொருட்கள், செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள், ரூ.11 லட்சம் ரொக்கம் என ரூ.4¼ கோடி பொருட்களை போலீசார் மீட்டனர். இதுமட்டுமல்லாது லட்சுமிபதிக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்த ரூ.29 லட்சம் முடக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் லட்சுமிபதியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெங்களூருவில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். ஹேக்கர் லட்சுமி பதியிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த் பார்வையிட்டார். இது குறித்து போலீஸ் கமிஷனர் கூறுகையில் பெங்களூருவில் இயங்கி வந்த பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையத்தை முடக்கி ரூ.4.¼ கோடி பொருட்களை வாங்கி மோசடி செய்த ஆந்திர ஹேக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது இதற்கு முன்பு பெங்களூருவில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதுவே முதல் வழக்கு ஆகும். இவர் துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை செய்துள்ளார். 2 வருடங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். அதில் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்ட அவர் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

Related Post

கோவில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை செலுத்திய பக்தர் – அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

Posted by - August 25, 2023 0
அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இந்நிலையில், கோவில்…

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் – 25 முறை மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை

Posted by - June 1, 2023 0
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வசித்து வருபவர் ராமானுஜ சாஹு. இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு…

நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் நிலைகுலையும் பூமியின் சுழற்சி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

Posted by - June 20, 2023 0
புதுடெல்லி: மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர்…

முதல் நாளே ஹிட் அடித்த பிரீமியர் எனர்ஜிஸ் ஐபிஓ…. ரூ.450 முதலீடு செய்திருந்தால் ரூ.990 கிடைத்திருக்கும்… ஒரே நாளில் 120% லாபம்..

Posted by - September 4, 2024 0
பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள்  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாள் பங்கின் விலை 120 சதவிகிதம் பிரீமியம் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. அதாவது ரூ.450க்கு வாங்கிய…

மீண்டும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை.! ஒரே நாளில் ரூ.4000 உயர்வு- நகைப்பிரியர்களுக்கு ஷாக்

Posted by - January 17, 2026 0
 தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளதா.? என்பதை தற்போது பார்க்கலாம்.. ராக்கெட் வேகத்தில் தங்கம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *