உஷார்… டெங்கு காய்ச்சலின் இந்த 4 அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..

260 0

டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இது வெறும் காய்ச்சலாக மட்டுமல்லாமல், இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே பிரச்சனையாகிவிடும்.

கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சல் பரவலாக அதிகரித்து வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் டெங்கு காய்ச்சல் அனைவரையும் பாதிக்கிறது. இரவு நேரத்தைக் காட்டிலும் பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறிகளும் தெரிவதில்லை.எனினும், டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இது வெறும் காய்ச்சலாக மட்டுமல்லாமல், இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே பிரச்சனையாகிவிடும். அவ்வாறு டெங்கு காய்ச்சல் இருப்பதை உணர்த்தக்கூடிய நான்கு முக்கியமான அறிகுறிகள் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.தொடர்ந்து காய்ச்சலை அனுபவிப்பது: தொடர்ச்சியான காய்ச்சல் டெங்கு இருப்பதற்கான ஒரு அறிகுறி ஆகும். காய்ச்சலோடு சேர்த்து தோலில் சிராய்ப்புகள், சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவையும் இதன் அறிகுறிகள். இது ஏழு நாள் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் போது அதிக காய்ச்சல், மோசமான தலைவலி, சோர்வு மற்றும் தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி போன்ற அறிகுறிகளும் தென்படும்.தடிப்புகள்: காய்ச்சல் வந்த இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு தோலில் தடிப்புகள் தோன்றுவது டெங்கு இருப்பதற்கான குறிகாட்டியாகும். மேற்தோலின் அடியில் உட்புற ரத்தக்கசிவு காரணமாக தோலில் சிராய்ப்புகள் ஏற்படும். இந்த தடிப்புகள் பொதுவாக அம்மை ஏற்படும் பொழுது தோன்றக்கூடிய காயம் போல காணப்படும்.குமட்டல் மற்றும் வாந்தி: கண்களின் பின்புறத்தில் வலி, குமட்டல், வாந்தி மற்றும் ஈறுகள் அல்லது மூக்கில் ரத்த கசிவு போன்றவை டெங்கு காய்ச்சலுக்கான பிற அறிகுறிகள். இது போன்ற அறிகுறிகள் இருக்கும் பொழுது உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம். பொதுவாக இந்த அறிகுறிகள் இரவு நேரத்தில் மோசமாகலாம் என்பதால் பகல் நேரத்தில் இதற்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியமாக கருதப்படுகிறது.

Related Post

குழந்தையை பலாத்காரம் செய்து எரித்த வழக்கில் திருப்பம்! தஷ்வந்த் விடுதலை- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Posted by - October 8, 2025 0
தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து ,உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில், தஷ்வந்த் மரண…

எம்.ஜி.ஆர்., ஆக முயன்று தோற்ற மு.க. முத்து – தந்தை கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. ஜெ., உதவி

Posted by - July 19, 2025 0
மறைந்த முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி. ஆரை போலவே திரைப்படங்களில் நடித்து பிரபலமாக முயன்று மு.க. முத்து தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. MK Muthu Died: மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

Posted by - September 6, 2023 0
சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன,…

சுழன்று அடித்த மாண்டஸ் புயல்.. வேரோடு சாய்ந்த 48 மரங்கள்

Posted by - December 10, 2022 0
Mandous cyclone : நேற்று மாலை 7 மணியிலிருந்து நள்ளிரவு 1 மணி வரை 48 மரங்கள் கீழே விழுந்துள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.மாண்டோஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை…

14,121 உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 1,38,000 லிட்டர் பால் கொள்முதல் – கலெக்டர் தகவல்

Posted by - November 15, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கால்நடை, பால்வளம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பிரிவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *