சீரியலில் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஆகவே விரைவில் முடிவுக்கு வரலாம் என்கின்றன சின்னத்திரை வட்டாரங்கள்.
சீரியல் இந்த மாதம் இறுதியில் முடிவடையவிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வெகுநாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. மூர்த்தி – தனம், ஜீவா – மீனா, கதிர் – முல்லை, கண்ணன் – ஐஸ்வர்யா என நான்கு அண்ணன் தம்பிகளும் பார்வையாளர்களின் கண் படும்படி ஒற்றுமையாக இருந்தனர். பின்னர் ஜீவா ஒருபக்கம், கண்ணன் இன்னொரு பக்கம் என வீட்டை விட்டு வெளியேறினர். தற்போது புது வீடு கட்டி அனைவரும் முன்பு போல் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.
இதற்கிடையே தனம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த விஷயம் மீனா மற்றும் முல்லைக்கு மட்டுமே தெரிந்திருந்தது. வீட்டினருக்கு தெரியாமல் அவருக்கு சிகிச்சையளிக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் ஐஸ்வர்யா மூலம் அனைவருக்கும் தெரிந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மொத்தமுமே தனத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரும் செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இது உண்மையா என தெரியவில்லை. தற்போது ஒளிபரப்பாகி வரும் எபிசோட்களில் கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது. அதே நேரத்தில் சீரியலில் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஆகவே விரைவில் முடிவுக்கு வரலாம் என்கின்றன சின்னத்திரை வட்டாரங்கள்.