உங்க வீட்டுல வெண்டைக்காய் சாப்பிடமாட்டாங்களா? இப்படி ப்ரை செய்யுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

190 0

காய்கறிகளில் வெண்டைக்காய் வளுவளுப்பாக இருப்பதால், நிறைய பேர் இந்த காய்கறியை சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் வெண்டைக்காய் ஏராளமான சத்துக்களைக் கொண்டது. இதை அடிக்கடி சாப்பிட்டால் பல ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை சாப்பிடுவது மிகவும் நல்லது.

வெண்டைக்காயைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். அதுவும் வெண்டைக்காயை வறுவல்/ப்ரை செய்தால், பெரியோர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வெண்டைக்காய் ப்ரையை சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, வெறுமனே கூட சாப்பிடலாம். இதை செய்வது மிகவும் சுலபம்.உங்க வீட்டுல வெண்டைக்காய் சாப்பிடமாட்டாங்களா? இப்படி ப்ரை செய்யுங்க.. விரும்பி  சாப்பிடுவாங்க.. | Vendakkai Varuval/Fry Recipe - Tamil BoldSky

உங்களுக்கு வெண்டைக்காய் ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் ப்ரையை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெண்டைக்காய் – 500 கிராம்

* கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வெண்டைக்காயை சிறு நீளத் துண்டுகளாக வெட்டி, அதை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அதில் கடலை மாவு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மாங்காய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரைத் தெளித்து, மசாலா வெண்டைக்காயில் ஒட்டும் வரை நன்கு பிரட்டி விட வேண்டும்.

* பின்பு அதை ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்

* பின் ஊற வைத்துள்ள வெண்டைக்காயைப் போட்டு, நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வெண்டைக்காய் ப்ரை தயார்.

Related Post

‘ஒரு நாய் போட்டோவை கூட நிம்மதியா போட விட மாட்றாங்க..’ பிரதீப் அந்தோணியின் பதிவு..!

Posted by - December 2, 2023 0
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அந்தோணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாய் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த பதிவுக்கு கிடைத்த கமெண்ட்ஸ்களை பார்த்து’ஒரு…

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த டாப் 6 சீரியல்கள்.. எப்படியோ தட்டு தடுமாறி முன்னேறிய பார்ட் 2 சீரியல்

Posted by - March 6, 2025 0
ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல் மக்கள் மனதை அதிகமாக கவர்ந்திருக்கிறது என்பதை டிஆர்பி ரேட்டிங்கின் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில்…

ஒரே நாளில் இரண்டு சீரியல்களை முடிக்கும் விஜய் டிவி.. இந்த தொடரும் முடிகிறதா?

Posted by - July 28, 2025 0
விஜய் டிவியின் இரண்டு முக்கிய சீரியல்கள் இன்னும் இரண்டே வாரங்களில் முடியப்போகிறது. ஒன்று பாக்கியலட்சுமி. பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே…

மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வருதா..? இந்த பிரச்சனைதான் காரணம்..!

Posted by - March 14, 2023 0
இந்த ஃபுட் கோமா அதிகரித்தது ஒர்க் ஃபிரம் ஹோமில்தான் என்று கூறப்படுகிறது. நமது உணவுப் பழக்கம் அதிகரித்தது முதல் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே திருப்பிப் போட்டுவிட்டது.…

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக நடிக்கப்போவது அவருடைய.. இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா

Posted by - September 19, 2023 0
மாரிமுத்து தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் எதிர்நீச்சல் சீரியலை பிரபலப்படுத்தியவர் மாரிமுத்து. இவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இந்தம்மா ஏய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *