சென்னை ஓட்டுநர் வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9 ஆயிரம் கோடி ரூபாய்…!

268 0

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்நர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடந்த 9-ந்தேதி திடீரென அவரது வங்கிக் கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதான செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பல ஜீரோக்கள் இருந்ததால், தனது வங்கி கணக்கில் 15 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், இது மோசடி வேலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் தனது நண்பருக்கு 15 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். பிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட்: வங்கி  அதிகாரிகள் அதிர்ச்சி | Over 900 crore deposited in bank accounts of 2 boys  in Bihar: Report - hindutamil.inஅது அவரது வங்கி கணக்கில் இருந்து டெபிட் ஆகியுள்ளது. இதனால் வங்கிக் கணக்கில் பணம் உள்ளது உண்மைதான் என உறுதி செய்து கொண்ட ராஜ்குமார், மேலும் பணத்தை நண்பருக்கு அனுப்ப முயன்றுள்ளார். அதற்குள் தவறை கண்டுபிடித்து சுதாரித்துக்கொண்ட தனியார் வங்கி, உடனடியாக பணத்தை திருப்பி எடுத்துக் கொண்டது.

அதன்பின், தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று வங்கியில் இருந்து பேசிய அதிகாரிகள், பின்னர் மிரட்டும் தோனியில் பேசியதாக தெரிகிறது. அதன்பின், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள அந்த வங்கியின் கிளைக்கு அழைத்து சென்று வழக்கறிஞர் முன்னிலையில், தவறுதலாக உங்கள் வங்கி கணக்கில் பணத்தை வரவு வைத்துவிட்டோம். நீங்கள் செலவு செய்துள்ள பணத்தை திருப்பி தரவேண்டாம். அதற்காக வாகன கடனாக பெற்றுக்கொள்ளலாம் என சமரசம் பேசியுள்ளனர். இத்துடன் இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம் என்று வங்கி கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

அமராவதி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! – டிடிவி தினகரன்

Posted by - May 20, 2024 0
கேரள அரசால் கட்டப்படும் புதிய அணையால் திருப்பூர், கரூரில் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின்…

இந்த அறிகுறிகள் இருந்தா… உங்க கல்லீரல் செயலிழக்க வாய்ப்பு உள்ளதாம்…அது கல்லீரல் புற்றுநோயாவும் மாறுமாம்!

Posted by - November 9, 2023 0
அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனைகளில் கொழுப்பு கல்லீரல் நோயும் ஒன்று. இந்த பிரச்சனை சமீபகாலமாக மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், அது உயிருக்கு ஆபத்தான…

கருணாநிதி, எம்.ஜி.ஆர் வணங்கிய டி.ஆர்.எஸ்! – மார்டன் தியேட்டர்ஸின் கதை

Posted by - December 15, 2023 0
சினிமா தயாரிப்பு தொழிலில் கொல்கத்தாதான் கோலோச்சிக்கொண்டிருந்தது. சினிமா தயாரிப்பு தொடர்பான எல்லா வேலைகளுக்கும் கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு மாற்றாக சேலத்திலேயே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன?…

“எத்தகைய வெட்கக்கேடு?” – விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

Posted by - March 20, 2026 0
தூத்துக்குடி: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பின்னணி தூத்துக்குடி மாவட்டம்…

பொன்முடிக்கு கடைசி வாய்ப்பு? இன்று மாறும் அமைச்சரவை? கூட்டத்தில் ஸ்டாலின் முக்கிய முடிவு

Posted by - April 17, 2025 0
பரபரப்பான சூழலுக்கு மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அமைச்சரவைக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக்கூட்டம், தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. அமைச்சரவைக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *