கடனை திருப்பி கொடுக்காவிட்டால் வீடு தேடி வரும் ‘சாக்லேட்’ பரிசு

320 0

மும்பை:

கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று ‘சாக்லேட்’ அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது. இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:- கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர தவணைக் காலம் கடந்த பிறகும், அதற்கான தொகையைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது. State Bank of India (SBI) Savings Account - Apply Online | Fincashஅத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏற்காமல் இருப்பது, அவர்களுக்கு கடனைத் திருப்பி செலுத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

அதுபோன்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் தவணையை வசூலிப்பதற்கு, அவர்களது இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ முன்னறிவிப்பின்றி நேரில் செல்வதே சிறந்த வழியாகும். அதற்காக, சாக்லேட்டுகளுடன் வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு வசூல் அதிகாரிகளை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் சில்லரை கடன் அளிப்பு ரூ.12,04,279 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.46 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது வங்கியின் சில்லரைக் கடன் அளிப்பு ரூ.10,34,111 கோடியாக இருந்தது.

Related Post

UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவா?

Posted by - April 19, 2025 0
– மத்திய நிதியமைச்சகம் மறுப்பு! 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என…

எம்.எல்.ஏ. பாலியல் தொல்லையால் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி- கடிதத்தில் பரபரப்பு புகார்

Posted by - June 30, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிறுவனத்தில் சேஜல் என்ற பெண் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு முதல்அமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சியை…

வெப்ப அலை எச்சரிக்கை: உரிய முன்னேற்பாடுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Posted by - April 12, 2024 0
புதுடெல்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் பிரதமர்…

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, அகவிலைப்படி உயர்வு.. அதிரடி அறிவிப்பு

Posted by - April 23, 2024 0
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி ஆகியவை 25 விழுக்காடு வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில்  பணியாற்றும் அரசுப்பணியாளர்களுக்கு படித்…

புதிய ஜிஎஸ்டி வரியால் புது வீடு கட்டுவது சுலபம்.. சிமெண்ட் முதல் மார்பில் வரை! மொத்தமாக குறையும் விலை

Posted by - September 4, 2025 0
சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை 28% சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது வீடு வாங்குபவர்கள் மற்றும் வீட்டை கட்டுபவர்களுக்கு செலவினங்களை குறைக்கும் என்று கூறப்படுகிறது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *