அரியானாவில் குடும்பத்தினர் கண்முன்னே மூன்று பெண்களை கற்பழித்த கும்பல்

184 0

அரியானா மாநிலம் பானிபட்டில், திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்கள், கத்திகள், வெட்டக்கூடிய கூர்மையான பெருட்கள் ஆகியவற்றுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளது.

வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் பெண்களை தவிர்த்து மற்ற குடும்ப உறுப்பினர்களின் கைகளை கட்டி, சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள் சத்தம் போடவில்லை. ஹரியானாவில் கூட்டு பாலியல் வன்புணர்வு - கணவர், காவலர் உள்பட 7 பேர் மீது  வழக்குப் பதிவு!,  married-woman-gangraped-by-husband-a-police-and-5-in-haryanaபின்னர் அந்த வீட்டில் இருந்த மூன்று பெண்களையும், அவர்கள் கண்முன்னே கற்பழித்துள்ளனர். அதன்பின் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பித்து ஓடியுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து அருகில் உள்ள மற்றொரு இடத்திலும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கணவன் மனைவி வசித்து வந்த வீட்டில் நுழைந்த கும்பல், கணவரை கடத்த முயன்றுள்ளது. அப்போது உடல்நலம் சரியில்லாத மனைவி, தனது கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

இந்த சம்பவத்தில் கும்பலால் அந்த பெண் தாக்கப்பட்டுள்ளார். இதில் காயம் அடைந்த அந்த பெண் உயிரிழந்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட அவரது கணவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் ஒரே கும்பல் செயல்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரண்டு சம்பவங்களும் ஒரே கிராமத்தில் நடைபெற்றுள்ள நிலையில், போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். ஆனால், இச்சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Related Post

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

Posted by - January 2, 2024 0
திருச்சி: திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர்…

ஆந்திராவில் களை எடுக்கும் போது விவசாய நிலத்தில் கிடைத்த வைர கற்கள் லட்சாதிபதியான பெண் கூலி தொழிலாளி

Posted by - July 17, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தேன் நிறத்திலான கல்…

பெரும் விபத்து தவிர்ப்பு: கொல்லம்-சென்னை ரெயிலில் அடிச்சட்டத்தில் விரிசலுக்கு காரணம் என்ன? அதிகாரிகள் ஆய்வு

Posted by - June 5, 2023 0
செங்கோட்டை: கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

கடன்பட்டது 100 ரூபாய்… 30 ஆண்டுக்கு பிறகு 10 ஆயிரம் ரூபாயாக திருப்பி கொடுத்த ஆசிரியர்

Posted by - June 8, 2023 0
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர்…

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ – யாருக்கும் பாதிப்பில்லை என மந்திரி டுவீட்

Posted by - June 15, 2023 0
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *