கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ – யாருக்கும் பாதிப்பில்லை என மந்திரி டுவீட்

301 0

கொல்கத்தா:

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3சி புறப்பாடு முனைய கட்டிடத்தின் செக்-இன் கவுண்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.Fire breaks out at Kolkata Airport's 3C departure terminal building | கொல்கத்தா  சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து..!!

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தன. தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில் செக்-இன் பகுதியில் கடுமையான தீ விபத்தின் ஒரு பகுதியைக் காட்டின. விமான நிலைய அதிகாரிகள் முனையத்தில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா கூறுகையில், டி போர்டல் செக்-இன் கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டத்தால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் முனைய கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டுள்ளது. இயல்பான செயல்பாடு திரும்பி உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், செக்-இன் மற்றும் விமானங்கள் செயல்பாடு இரவு 10.15 மணிக்கு மீண்டும் தொடங்கும் என கொல்கத்தா விமான நிலையம் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தது.

Related Post

குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு

Posted by - March 12, 2025 0
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 1000 உதவித்தொகை, ரூபாய் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் புதுச்சேரியில் 21 வயது முதல் 55…

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்! “கொரோனா” முக்கிய காரணம்! மருத்துவர்கள் பகீர்! தடுக்க என்ன செய்யணும்

Posted by - September 30, 2023 0
டெல்லி: இன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதய நோய்களும் இதய பாதிப்புகளும் திடீர் திடீரென அதிகரிக்கும் நிலையில், அதைத் தடுக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் முறைகளைத்…

அமைச்சர் உதயநிதிக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்!

Posted by - April 20, 2024 0
சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த்…

14 பேரில் யாரை திருமணம் செய்யலாம்?- விவாதத்தை ஏற்படுத்திய பட்டதாரி பெண்ணின் டுவிட்டர் பதிவு

Posted by - July 19, 2023 0
மேட்ரிமோனியின் தளங்கள் மூலம் திருமண வரன்களை தேடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 29 வயதான பி.காம் பட்டதாரி பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு விவாதத்தை ஏற்படுத்தி…

தொடர் வீழ்ச்சிக்கு பிறகு மீளும் பங்குச்சந்தைகள்….. முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்ட எந்த பங்கை வாங்கலாம்…

Posted by - August 7, 2024 0
அமெரிக்காவில் சாத்தியமான பொருளாதார மந்தநிலை, மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதட்டங்கள் உள்ளிட்ட காரணங்களினால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3 நாட்களாக பெரும் வீழ்ச்சி அடைந்தன. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *