கடலூரில் “அந்தரத்தில்” தொங்குச்சாமே.. மிட்நைட்டில் ஊசலாடிய 40 உயிர்கள்.. கண்விழித்து பார்த்தால்???

203 0

கடலூர்:

அரசு பஸ் ஒன்று அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து, கடலூரே அதிர்ந்து போய்விட்டது.. என்ன நடந்தது நள்ளிரவில்?

சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று கிளம்பி சென்றது.. கிட்டத்தட்ட 40 பேர் அதில் பயணம் செய்தனர். வீரமணி என்பவர் இந்த பஸ்ஸை ஓட்டினார். இவருக்கு 45 வயதாகிறது.

இந்த பஸ் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் குறுக்கு சாலை வெள்ளாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது..கடலூரில் "அந்தரத்தில்" தொங்குச்சாமே.. மிட்நைட்டில் ஊசலாடிய 40 உயிர்கள்.. கண்விழித்து  பார்த்தால்??? | Cuddalore incident and 40 passengers rescued after breaking  the glass in ...

நள்ளிரவு என்பதால், பயணிகள் எல்லாருமே தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், அந்த பாலத்தின் தடுப்பு சுவர் மீது பலமாக பஸ் மோதியது… சிறிது தூரத்துக்கு தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு சென்று, பஸ்சின் முன்பகுதி மட்டும் பாலத்தில் அந்தரத்தில் தொங்கியப்படி நின்றுவிட்டது.

அந்தரத்தில் பஸ்:

பாலத்தில் பஸ் இடித்துவிட்டதை அறிந்து, தூங்கி கொண்டிருந்த பயணிகள் எல்லாம் அலறி கூச்சல் போட்டார்கள்.. இதனால், பஸ்ஸை விட்டு வெளியே வர முயன்றார்கள்.. அந்த பாலத்திலேயே அந்தரத்தில் பஸ் தொங்கிக்கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தார்கள்.. இதனால் மேலும் பயத்தில் கூச்சல் போட்டார்கள்.. முன்பக்க படிக்கட்டு பாலத்தில் அந்தரத்தில் தொங்கியபடியே இருந்ததால், அவர்களால் உடனடியாக கீழே இறங்கி வரவும் முடியவில்லை.

பதற்றத்தில் கூச்சலிட்டபடியே இருந்தனர்.. இந்த அலறல் சத்தத்தை கேட்டு, பாலத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள், பதறியடித்து கொண்டு வந்தார்கள்.. பஸ் பாலத்தில் தொங்கியதால், அவர்களால் உடனடியாக பஸ்ஸில் ஏறி செல்ல முடியவில்லை. எனினும், பஸ்சின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு, பயணிகளை வெளியே மீட்டனர்.

பரபரப்பு:

அதற்குள் தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் விரைந்து வந்து, பயணிகைளை பத்திரமாக மீட்டனர். பஸ் கீழே விழுந்திருந்தால், மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, மாற்று பஸ் மூலம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்பு வாகனத்தை கொண்டு வந்து, அந்தரத்தில் தொங்கியபடி நின்ற பஸ்சையும் போலீசார் மீட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு

Related Post

திக் திக் டிட்வா…சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் – வெதர்மேன் அலர்ட்

Posted by - November 29, 2025 0
டிட்வா புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கிய நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களிலும் நாளை முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கன மழைக்கான…

அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா – விளக்கம் அளித்த ஆண்டாள் கோயில் நிர்வாகம்!

Posted by - December 16, 2024 0
அதைத் தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவு வாயிலில் வைத்து இளையராஜாவிற்கு மரியாதை அளித்தனர். அதன்பின் இளையராஜா வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்தார். மேலும் “திவ்ய…

பேங்க்கில் பணம் எடுக்குறீங்களா?பான் எண் இருக்கா?வங்கிகளுக்கு வருமான வரித்துறை திடீர் உத்தரவு பாருங்க

Posted by - October 25, 2023 0
சென்னை: வங்கிகளுக்கு வருமான வரித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.. இது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் மிக முக்கியமானது பான்…

சென்னையில் இடியுடன் கூடிய கனமழை- காலை 7 மணி வரை நீடிக்கும் என தகவல்

Posted by - August 29, 2023 0
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *