தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் – போர்களம் போல காட்சியளிக்கும் அன்பழகன் வளாகம் | Teachers Protest

280 0

சம வேலைக்கு சம ஊதியம்: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்.teacher protest

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்துவருகிறது.

Teachers Protest in Chennai: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கடந்த மாதம் (செப்டம்பர்) 28ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். பல்வேறு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தும் இடத்திலேயே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த நிலையில், உண்ணாவிரதம் குறித்து ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இடையே இருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்திவருகின்றனர்.

இதற்கிடையில், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக கட்டாயம் முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

முன்னதாக இது குறித்து பேசிய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட், “தமிழக அரசு சார்பில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறிப்பிட்ட தேதிக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவோம்” என்று உறுதிப்பட தெரிவித்தார்.

இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளியின் உத்தரவாதத்தை ஏற்க TET தரப்பு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய TET தரப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Post

கும்பகோணம் சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?

Posted by - October 8, 2025 0
சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?  சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

“எஸ்ஐஆர் பூர்த்தி செய்யணும்! ஓடிபியை சொல்லுங்கள்”னு யார் கேட்டாலும் தராதீங்க! சைபர் கிரைம் வார்னிங்,…

Posted by - November 22, 2025 0
புதுவை: வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலை (SIR) நிரப்புவதற்காக யாராவது போன் செய்து ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுவை போலீஸார் எச்சரிக்கை…

சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

Posted by - February 17, 2023 0
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து…

சென்னையில் வெள்ளம் தேங்கியதற்கு காரணமே இதுதான்.. விளாசிய நீதிமன்றம்! மாநகராட்சி மீது சாடல்

Posted by - December 12, 2023 0
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த வெள்ள பாதிப்புகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கியமானவை என…

1 ரூபாய் அனுப்பி பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் ‘கூகுள் பே’ மூலம் ரூ.65 ஆயிரம் மோசடி

Posted by - March 10, 2023 0
தூத்துக்குடி: நவீன யுகத்தில் தொழில்நுட்பங்கள் வளர, வளர இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஆன்-லைன் மோசடி மூலம் தனி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *