தமிழகமெங்கும் விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொள்ளும் நவராத்திரி கொண்டாட்டம் !!

183 0

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து திரு விளக்குப் பூஜை, பிரபலங்கள் கலந்து கொள்ளும் நவராத்திரி குறித்த சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் ஆகியவை நடக்கவுள்ளது.தமிழகமெங்கும் விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொள்ளும் நவராத்திரி கொண்டாட்டம்  !! | Navratri Celebration by Vijay Tv Celebrities - Tamil Filmibeat

நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடவுள்ளனர். திருவிளக்கு பூஜைக்கு முன்பதிவு டோக்கன் பெற்றுக்கொண்ட பக்தர்கள் விளக்கு மற்றும் பூஜை தட்டுடன் வந்தால் மட்டும் போதும் பூஜைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.

விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து நவராத்திரியை வெகு சிறப்பாகக் கொண்டாடலாம். சூப்பர் சிங்கர் திறமையாளர்களின் பாடல்களை நேரடியாகக் கேட்டு மகிழலாம், அத்துடன் செஃப் தாமுவின் தயாரிப்பில் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதத்தை உண்டு மகிழலாம்.

இந்நிகழ்ச்சிகள் காஞ்சிபுரத்தில் 15 அக்டோபர் 2023 நேற்று முதலாவதாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்யலட்சுமி, ஆஹா கல்யாணம் சீரியலிலிருந்து மகா ஆகியோர் மக்களுடன் இணைந்து சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டனர்.

விஜய் டிவி நட்சத்திரங்கள் பூஜையில் கலந்துகொண்டதை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சென்னையில் 16 அக்டோபர் 2023, ஈரோட்டில் 17 அக்டோபர் 2023 , திருச்சியில் 18 அக்டோபர் 2023 திருநெல்வேலியில் 20 அக்டோபர் 2023 , தஞ்சாவூரில் 21 அக்டோபர் 2023 , மதுரையில் 22 அக்டோபர் 2023 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

விஜய் டிவி நவராத்திரி ஸ்பெஷலாக கொலு வைக்கும் போட்டியையும் அறிவித்துள்ளது. உங்கள் வீட்டில் வைக்கும் அழகான கொலுவின் போட்டோவை @vijaytelevision க்கு #VijayGoluContest- எனும் hashtag உடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்யுங்கள்.

போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். ஸ்டார் விஜய் டிவி பிரபலங்களுடன் இணைந்து கொண்டாடும் அரிய வாய்ப்பினை பெற்று, விஜய் நட்சத்திரங்களுடன் நவராத்திரியைக் கொண்டாடி மகிழுங்கள்.

விஜய் தொலக்காட்சியின் நவராத்திரி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முழுவதுமாக பிரித்வி இன்னர்வியர்ஸ் நிறுவனத்தினர் வழங்குகிறார்கள்.

 

Related Post

ஒரு மனிதன் வாழ்நாளில் இவ்வளவு முறை சிரிக்கிறானா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஆச்சரிய உண்மை

Posted by - February 9, 2026 0
ஒரு மனிதன் சிரிப்பது சாதாரண விஷயம் போல தோன்றினாலும், அதற்குப் பின்னால் அறிவியல் ரீதியான பல சுவாரசியமான உண்மைகள் உள்ளன. சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வு ஒன்று,…

இவர்கள் தான் பிக்பாஸ் 9 போட்டியாளர்களா?… உறுதி என கூறப்படும் லிஸ்ட் இதோ

Posted by - September 17, 2025 0
பிக்பாஸ் 9 பிக்பாஸ், இனி 100 நாட்கள் கவலையே இல்லை. செம சூப்பர் என்டர்டெயின்மென்ட்டாக இருக்கப்போகிறது. கலாட்டா, சண்டை, வாக்குவாதம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், விளையாட்டு என…

விஜய் டிவி மணிமேகலையை மதம் மாற்றிவிட்டாரா கணவர் ஹுசைன்? சர்ச்சைக்கு பதில் இதோ

Posted by - July 5, 2023 0
மணிமேகலை விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலக்கிவந்த மணிமேகலை அந்த ஷோவில் இருந்து திடீரென விலகினார். அதன் பின் அவர் தொகுப்பாளராக மற்ற…

4, 5 நாள்ல.. வேலையை காட்டிய Nothing Phone 2a.. திடீர்னு கருப்பாக மாறும் டிஸ்பிளே.. கதறும் கஸ்டமர்ஸ்!

Posted by - March 21, 2024 0
ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை.. உண்மையாகவே நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தொடங்கியதும், மக்கள் “அடித்து பிடித்து” ஆர்டர் போட்டனர். நத்திங்கின் கூற்றுப்படி 1 மணி…

ஏழரைச் சனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் தொல்லைகள்

Posted by - January 25, 2023 0
அஷ்டம சனியில் தொட்டது துலங்காது ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *