முள்ளங்கி வாங்க போறீங்களா.. அப்ப அதன் கீரையை எட்ட எறியாதீர்கள்.. இதயம், சிறுநீரகத்திற்கு நல்லது!

388 0

சென்னை:

முள்ளங்கி சாப்பிட்டிருப்பீர்கள், முள்ளங்கி கீரையை சாப்பிட்டுள்ளீர்களா? முயல்கள் விரும்பி சாப்பிடும் முள்ளங்கி கீரையின் மருத்துவ குணங்கள் என்ன?

முள்ளங்கி வெள்ளை நிறத்திலும் பிங்க் நிறத்திலும் பூமிக்கு அடியில் விளையக் கூடியது. இந்த முள்ளங்கியில் சிகப்பு அதாவது பிங்க் நிறம் மிகவும் நல்லது என்பார்கள். இதை சாம்பாரில் போட்டால் வீடே கமகமக்கும்.முள்ளங்கி வாங்க போறீங்களா.. அப்ப அதன் கீரையை எட்ட எறியாதீர்கள்.. இதயம், சிறுநீரகத்திற்கு  நல்லது! | Health tips of of Mullangi keerai - Tamil Oneindia

இந்த முள்ளங்கி ஒரு வித வாசனை வரும் என்பதாலும் சீதளம் செய்யும் என்பதாலும் இதை பலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் இது உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதை விட முள்ளங்கியின் தலை பகுதியில் உள்ள கீரை உடலுக்கு நல்லது.

வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும், புண்களை எளிதில் ஆற்றும். சிறுநீரை பெருக்கி வெளியேற்ற உதவும். உடல் சூட்டுக்காரர்கள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சியாகும். அதே போல் புளிப்பேற்பத்தையும் குறைத்துவிடும். இந்த முள்ளங்கி கீரையில் 5 கிராம் புரதம் உள்ளது. அது போல் இரும்பு சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த சத்துகள் முள்ளங்கியில் இருப்பதை விட கீரையில்தான் அதிகமாக இருக்கிறதாம். மலத்தை இளக்கும் தன்மையும் இந்த கீரைக்கு உண்டு. தோல் வியாதிகள் மறையும். வாயில் வறட்சிகள் நீங்கும். விட்டமின் சி இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் இந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இதய பிரச்சினைகள் உள்ளவர்களும் வாரத்தில் ஒரு முறையாவது இந்த கீரையை உண்ண வேண்டும். சிறுநீரக பிரச்சினைக்கும் அருமருந்து. சிறுநீரக கற்களை நீக்கும். எடைக் குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கெட்ட கொழுப்பையும் குறைத்து ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுத்து நிறுத்துகிறது.

கண் பிரச்சினைகளுக்கும் இது ஒரு நல்ல தீர்வு. இந்த கீரைகள் சிறுவயதிலேயே சாப்பிட்டு வந்தால் இளம் வயதிலேயே கண்ணாடி போடும் பிரச்சினையை தவிர்க்க முடியும். சுவாச பிரச்சினைகளுக்கும் இது நல்லது. சுவாச பாதையில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றும். இந்த கீரையை கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் சாப்பிடலாம். எலும்பு தேய்மானத்தையும் சரி செய்ய உதவுகிறது. இனி இந்த முள்ளங்கியை வாங்கினால் கீரையை எட்ட எறியாதீர்கள்.

Related Post

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!

Posted by - June 21, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தை அணுக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும்…

ராமதாஸ் ஐசியுவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை: மருத்துமனையில் அன்புமணி பேட்டி

Posted by - October 6, 2025 0
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதயம் தொடர்பான…

ஆட்டம் காணும் திமுக? அமைச்சர் கே.என். நேரு, மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – நெருங்கும் தேர்தல்

Posted by - April 7, 2025 0
தமிழக அமைச்சர் கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கே.என். நேரு…

டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Posted by - November 27, 2025 0
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும்…

விளாம்பழம்.. வியக்க வைக்கும் பழம்.. பெண்கள் இந்த விளாம்பழத்தை சாப்பிடலாமா.. அடடே இது தெரியாம போச்சே

Posted by - December 22, 2023 0
சென்னை: பல வியாதிகளை குணப்படுத்தும் அற்புத பழம்தான் விளாம்பழம்.. பெண்கள் இந்த பழத்தை சாப்பிடலாமா? விளாம்பழத்தில், இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் A சத்துக்களும் நிறைந்துள்ளன.. பித்தத்தை போக்கக்கூடிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *