ஓலா, ஊபர் போராட்டம் எதிரொலி: 20 கிலோமீட்டருக்கு ரூ.1000 கட்டணம் – பயணிகள் கடும் அதிர்ச்சி

194 0

சென்னை:

ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை
தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மூன்றாவது நாளாக ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் எதிரொலியாக நேற்று சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை பங்கேற்க உள்ளனர். போராட்டத்திற்கு முன் சென்னையில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.400 வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், போராட்டத்தின் எதிரொலியாக 20 கிலோமீட்டர் தூரத்திற்கு இன்று ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post

11 முதல் மதியம் 3 மணி வரை வெளியே வராதீங்க…

Posted by - April 12, 2023 0
குளிர்பானங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ரசாயனம் மூலம் வாழைப்பழம், மாம்பழம், தர்பூசணி ஆகியவை பழுக்கவைப்பது கண்டறியப்பட்டால், கடையின் உரிமம் ரத்து…

தஞ்சை பெரிய கோவிலில் 18 நாட்கள் நடக்கும் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted by - April 17, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர்…

ஆளுநரை சந்தித்த விஜய்! கைதான புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் பரபரப்பு

Posted by - December 30, 2024 0
பொதுமக்களிடம் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை வழங்கிய தவெக கட்சியினர் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா…? அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த விளக்கம்..!

Posted by - June 12, 2023 0
சென்னையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ்…

சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா?கைதான ஆசிரியர்கள் எங்கே?

Posted by - January 12, 2026 0
ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கைது செய்து மறைத்து வைத்தால் போராட்டம் நீர்த்து போய்விடும் என்ற திமுகவின் செயல்பாடு, ஜனநாயகத்தை திமுக எவ்வளவு அலட்சியமாக எண்ணுகிறது என்பதற்கான சாட்சி-…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *