யூ டியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமினில் விடுதலை: மீண்டும் பைக் ஓட்டுவேன் என்கிறார்

247 0

பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்திற்கு உள்ளானார். இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸ் உரிமையை 10 வருடத்திற்கு ரத்து செய்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஜெயலில் அடைக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.என் பவர் தெரியாமல் விளையாடுறீங்க.. எனக்கு பயமே கிடையாது.. ஜாமினில் வந்த  டிடிஎப் வாசன் பகீர் வீடியோ | I Dont have a fear says TTF Vasan Who releases  bail after bike ...
ஜாமின் கிடைத்த நிலையில், டிடிஎஃப் வாசன் நேற்று சிறையில் இருந்து வெளியில் வந்தார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், சர்வதேச லைசென்ஸ் பெற்று மீண்டும் பைக் ஓட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பைக்கும் ஓட்டுவேன். படத்திலும் நடிப்பேன். ஆர்வத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது. சர்வதேச லைசென்ஸ் எடுக்கலாம். இல்லையெனில் மேல்முறையீடு செய்யலாம் . கை போனதைவிட, லைசென்ஸ் போனபோது கண் கலங்கிவிட்டேன். எல்லாவற்றிலும் உறுதியாக இருப்பேன். ஆனால் 10 வருடம் லைசென்ஸ் ரத்து என்றபோது சற்று வருத்தமாக இருந்தது.

இவ்வாறு டிடிஎஃப் வாசன் தெரிவித்தார். ஆனால், சர்வதேச லைசென்ஸ் வைத்து தமிழகத்தில் வாகனம் ஓட்ட முடியாது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின்

Posted by - December 8, 2025 0
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கோயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். சீர்காழி அருகே திருவெண்காட்டில் இந்துசமய…

“மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை” தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!

Posted by - March 14, 2025 0
தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே தமிழக பட்ஜெட் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல்,…

இந்து மக்கள் – திருமாவளவன் ஆவேசம்

Posted by - January 24, 2024 0
இந்திய நாடெங்கும் ஜாதி, மதத்தின் பெயரால் வன்முறை கொடுமைகள் தலை விரித்தாடி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் அப்பாவி இந்து மக்கள்…

போதைப் பழக்கமே குற்றங்களை எளிமையாக்குகிறது – இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை

Posted by - March 9, 2024 0
நாட்டில் நடக்கும் பாதி குற்றங்களுக்கு காரணம் போதை பழக்கம் தான் என்றும் குற்றங்களை எளிமையாக செய்ய போதை ஒரு ஆயுதமாக இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஊர்வசி…

தலைக்கு அடிக்கடி குளிக்கலான என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் தெரியுமா? இனிமே இந்த தப்ப பண்ணாதீங்க…!

Posted by - December 4, 2023 0
நல்ல ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பது என்பது உங்கள் உடலை தினமும் சுத்தப்படுத்துவது மட்டுமல்ல. அதில் உங்கள் தலைமுடியை சுத்தமாக வைத்திருப்பதும் அடங்கும். நீங்கள் நல்ல முடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *