போதைப் பழக்கமே குற்றங்களை எளிமையாக்குகிறது – இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை

223 0

நாட்டில் நடக்கும் பாதி குற்றங்களுக்கு காரணம் போதை பழக்கம் தான் என்றும் குற்றங்களை எளிமையாக செய்ய போதை ஒரு ஆயுதமாக இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஊர்வசி நடித்துள்ள ‘J.பேபி’ படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பா.ரஞ்சித் சிறப்பு திரைப்பட காட்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களை நாம் எப்படி பார்க்கிறோம் என்ற பார்வையை இந்த படம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என நினைக்கிறேன்.மாற்றங்கள் உருவாக இப்படம் முதல் படியாக இருக்கும். நீலம் புரொடக்‌ஷன் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கிறது என்றால் அதற்கு சில வரைமுறைகள் உண்டு.இதையடுத்து புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பேசிய அவர் கூறியதாவது :

இந்த சம்பவத்தை நினைக்கும் போது பதற்றமாகவும் . பயமாகவும் இருக்கிறது. எனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தச் செய்தி என்னை பெரிதளவில் பாதித்துள்ளது .

இங்கே நிறைய பிரச்சினைகள் உள்ளன. நம் கல்வி நிலையங்கள் சரியான கல்வியை சொல்லிக்கொடுக்கின்றனவா? என்ற கேள்வியும் எழுகிறது.போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் இது போன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை. குற்றம் செய்தவர் இன்று மாட்டிக்கொண்டார்கள். ஆனால், இதில் சிக்கிக்கொள்ளாத, அப்பாக்கள், தாத்தாக்கள், மாமன்கள் இன்னும் உலாவிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என வேதனையுடன் தெரிவித்துளளார் இயக்குநர் பா.ரஞ்சித் .

Related Post

பிடிஆர் ஆடியோ விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்

Posted by - May 2, 2023 0
‘உங்களில் ஒருவன் பதில்கள் ’ பதிவில் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஓர் ஆடியோ…

மூக்கிரட்டை இலை.. சிறுநீரக நோய்களை விரட்டியடிக்கும் மூலிகை நண்பன்.. அருமையான மூக்கிரட்டை கீரை சூப்

Posted by - December 11, 2023 0
சென்னை: சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காக்கக்கூடியது மூக்கிரட்டை கீரைகள்.. இந்த கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன? சத்தான மூக்கிரட்டை ரசம் எப்படி செய்வது தெரியுமா?மூக்கிரட்டையை, மூக்கரட்டை கீரை என்பார்கள்..…

”யார் சொத்து, தூக்கிருவேன்” மேடையில் மகன் அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்? விசிக மீது அட்டாக்?

Posted by - May 12, 2025 0
வன்னிய இளைஞர் மாநாட்டில் பாமக நிறுவனம் ராமதாஸ், மகன் அன்புமணியை மறைமுகமாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பட்டவர்களின் சொத்து அல்ல என, அதன்…

நைட் பார்ட்டியில் கொக்கைன்.. சிக்கும் விஐபி நடிகர், நடிகைகள்.. வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி

Posted by - June 26, 2025 0
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீகாந்த் கைதானது போன்று பல விஐபி நடிகர்கள், நடிகைகள் சிக்குவார்கள் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில்…

இதய நோய், புற்றுநோய்-ன்னு எதுவும் வரக்கூடாதா? அப்ப இந்த எண்ணெயை உங்க சமையலுக்கு யூஸ் பண்ணுங்க..

Posted by - October 27, 2023 0
தற்போது சமையலில் பயன்படுத்த ஏராளமான எண்ணெய்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த எண்ணெய்களைப் பார்க்கும் போது எந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *