1 கப் கடலை மாவும், 3/4 கப் நெய்யும் இருக்கா.. அப்ப இந்த மாதிரி மைசூர் பாக் செய்யுங்க… சூப்பரா இருக்கும்..

224 0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் வீடுகளில் பலகாரங்களை செய்வோம். நீங்களும் உங்கள் வீட்டில் தீபாவளி பலகாரங்களை செய்ய தொடங்கிவிட்டீர்களா? பொதுவாக ஸ்வீட் என்றதுமே பலரது நினைவிற்கு முதலில் வருவது மைசூர் பாக்காகவே இருக்கும். அதுவும் வாயில் வைத்ததும் கரையும்படியான மைசூர் பாக்கை சாப்பிடவே அனைவரும் விரும்புவோம்.

உங்கள் வீட்டில் உள்ளோர் மைசூர் பாக்கை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பலகாரம் செய்யும் போது, மைசூர் பாக்கையும் செய்யுங்கள். மைசூர் பாக் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது செய்வதற்கு மிகவும் குறைவான பொருட்களே போதும்.

உங்களுக்கு வாயில் வைத்ததும் கரையும்படியான மைசூர் பாக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய் மைசூர் பாக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.1 கப் கடலை மாவும், 3/4 கப் நெய்யும் இருக்கா.. அப்ப இந்த மாதிரி மைசூர் பாக்  செய்யுங்க... சூப்பரா இருக்கும்.. | Diwail Special Ghee Mysore Pak Recipe -  Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு – 1 கப்

* எண்ணெய் – 3/4 கப்

* நெய் – 3/4 கப்

* சர்க்கரை – 1 கப்

* தண்ணீர் 1/2 கப்

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி லேசாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் பாதியை ஒரு பௌலில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் மீதமுள்ள பாதி எண்ணெய் நெய் கலவையை கடலை மாவில் ஊற்றி கட்டிகளின்றி நன்கு மென்மையாக கலந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு அகலமான வாணலியில் 1 கப் சர்க்கரை மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி கலந்து, அடுப்பில் வைத்து சர்க்கரையை கரைக்க வேண்டும். சர்க்கரை கரைந்ததும், குறைவான தீயில் வைத்து, சர்க்கரை கம்பி பதத்திற்கு வரும் வரை சூடேற்ற வேண்டும்.

* சர்க்கரை பாகு கம்பி பதத்திற்கு வந்ததும், அதில் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து நன்கு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* கடலை மாவானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் எடுத்து வைத்துள்ள எண்ணெய் நெய் கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி விட வேண்டும்.

* கடலை மாவை வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, மீண்டும் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* இறுதியாக ஒரு பாத்திரத்தில் நெய்யை தடவி, அதில் இந்த கடலை மாவை ஊற்றி பரப்பி, 1 மணிநேரம் குளிர வைக்க வேண்டும்.

* அதன் பின் கத்தியால் அதை துண்டுகளாக்கினால், சுவையான நெய் மைசூர் பாக் தயார்.

Related Post

கிளாமரில் அசத்தும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.. வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள்

Posted by - June 20, 2023 0
ப்ரியா பவானி ஷங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து கலக்கி கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி ஷங்கர். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பத்து…

பாடகி அனுராதாவின் கணவரா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க

Posted by - March 14, 2023 0
பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி அசத்தியவர் தான் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பம்பாய்” படத்தில் இடம் பெற்றுள்ள மலரோடு மலர்ந்து என்ற…

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

Posted by - January 7, 2023 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக…

சிக்கன் முதல் சர்பத் வரை.. ரம்ஜான் மதிய விருந்துக்கு அசத்தல் ரெசிபீஸ்..

Posted by - April 22, 2023 0
நோன்புக்குப் பிறகு சுவையான இஃப்தார் உணவை புதுமையாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் இதோ அதற்கான சில டிப்ஸ்கள் இங்கே.. ரம்ஜான் பண்டிகை வருகின்ற சனிக்கிழமை .…

நேற்று விசித்ரா கேமரா முன்பு பேசிய அந்த வார்த்தை.. விமர்சிக்கும் ரசிகர்கள்.. பிக் பாஸ் வைத்த செக்

Posted by - December 30, 2023 0
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்திரா நேற்று தினேஷ் பற்றி கேமரா முன்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தினேஷின் பர்சனல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *