காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் வட மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், கடந்த 17-ந் தேதி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக பகுதிகளை நோக்கி வரும், கன மழை இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இது இந்த பருவமழை காலத்தின் 3-வது மழைப்பொழிவாக பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை பெரிய அளவில் பெய்யவில்லை. ஆனால் அதேநேரத்தில் சென்னை உள்பட உள்மாவட்டங்களில் மலை பிரதேசங்களில் இருப்பது போன்ற குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதற்கு காரணமாக, மே மாதங்களில் ஏதாவது புயல், தாழ்வு மண்டலம் உருவாகும்போதோ அல்லது அது கடந்து செல்லும்போதோ எப்படி வட இந்திய பகுதிகளில் உள்ள வறண்ட காற்று உள்ளிழுக்கப்பட்டு வெப்பம் எப்படி அதிகரிக்கிறதோ?, அதேபோல்தான் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதிகளுக்கு அருகில் வந்தததால், வட இந்திய பகுதிகளில் உள்ள குளிர்ந்த காற்றை இழுத்து சென்னை மற்றும் உள் மாவட்டங்களில் குளிர்ச்சியான சூழலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் காற்றழுத்த
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதுவும் தமிழகத்தின் வட மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு தமிழகத்தில் குறைவாக இருப்பதாகவும், இந்த இடைவெளிக்கு பிறகு, டிசம்பர் 2-வது வார தொடக்கத்திலோ அல்லது 3-வது வாரத்திலோ இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு வானிலை நிகழ்வு ஏற்பட உள்ளதாகவும், அதன் காரணமாக மீண்டும் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிகழ்வு புயலாக மாறும் பட்சத்தில் தமிழகத்துக்கே அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு மைய வட்டாரங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
Related Post
இந்தமுறை கார்.. வாரம் ஒரு சர்ச்சை.. விளம்பரம் தேடுகிறாரா டிடிஎப் வாசன்.? தியேட்டர் வாசலில் நடந்தது என்ன?
TTF Vasan : நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் வாசன். சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து போக்குவரத்து…
உங்க வங்கி கணக்குக்கு 1 ரூபாய் வந்துச்சா…. அப்போ நீங்க செலக்ட்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6…
இபிஎஸ்-க்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்..!
நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று அஜித்திடம் இரங்கல் தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைப்பேசி…
‘கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் செயலிழந்து நிற்கிறது திமுக அரசு’ – அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது, தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. – அண்ணாமலை கள்ளச் சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் திமுக அரசு செயலிழந்து நிற்பதாக பாஜக தமிழக தலைவர்…
பழைய உணவு பொருட்களை பயன்படுத்துவதால் விஷமாக மாறும் “சவர்மா”
அரபு நாடுகளில் இறைச்சி துண்டுகளை உலோக குச்சியில் சொருகி நெருப்பில் சுட்டு சாப்பிடுகிறார்கள். இதில் சில மாற்றங்களை செய்து நமது நாட்டில் ‘சவர்மா’ என்ற பெயரில் தயாரித்து…
Categories
- MEMES (12)
- அரசியல் (184)
- இந்தியா (468)
- உலகம் (173)
- சினிமா (812)
- தமிழ்நாடு (1,085)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (255)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (84)
Recent Posts
- ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?

- 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

- நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

- “தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

- திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
