அரசாணிக்காய்.. அல்சரை அண்ட விடாது காக்கும் அற்புத காய்.. சர்ருனு உடல்எடை குறையும் பாருங்க.. செம ஜூஸ்

197 0

சென்னை:

அரசாணிக்காய் இருந்தால் போதும்.. அல்சரை நம்மிடம் அண்டவிடாமல் பாதுகாக்கும்.. அந்த அளவுக்கு நன்மைகளை கொண்டதுதான் இந்த அரசாணிக்காய்.

அரசாணிக்காயை, பெரும்பாலும் பரங்கிக்காய் என்பார்கள்.. சாம்பல் பூசணி, சிவப்பு பூசணி, மஞ்சள் பூசணி, சர்க்கரை பூசணி இப்படி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும்.. இது ஒரு நீர்க்காய் ஆகும். 100 கிராம் காயில் 26 கலோரிகள் இருக்கிறதாம். ஆனால், கொழுப்பு இல்லை.

வைட்டமின் B1, B2, B6, D, C, பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் இப்படி ஏகப்பட்ட சத்துக்கள் இந்த அரசாணிக்காயில் நிறைந்துள்ளன.அரசாணிக்காய்.. அல்சரை அண்ட விடாது காக்கும் அற்புத காய்.. சர்ருனு உடல்எடை  குறையும் பாருங்க.. செம ஜூஸ் | Do you know the Health Benefits of  Parangikkai and Ash Gourd yellow ...

கண் பார்வை:

அரசாணிக்காயில் வைட்டமின் A ஏராளமாக உள்ளதால், கண்பார்வைக்கும், கண் கோளாறுகளை சரிசெய்யவும் உதவக்கூடியது.. இந்த காயில், வைட்டமின்கள் B, C உள்ளதால், உடம்பில் உள்ள சூட்டை குறைத்து, குளிர்ச்சியை தரக்கூடியது.. அதேசமயம், இருமல் இருந்தாலும் இந்த கீரை சாப்பிட்டால் குணமாகும்..

இந்த அரசாணிக்காயில், அதிக நார்ச்சத்தும், குறைவான கலோரியும் உள்ளதால், உடல் எடை குறைப்பவர்களுக்கு பெஸ்ட் காய் இதுவாகும்.. போதாக்குறைக்கு, அளவுக்கு அதிகமான நீர்ச்சத்தும் உள்ளதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், இந்த காயை தவறவிடக்கூடாது. இந்த அரசாணிக்காயில் பெக்ட்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது.. இது கொழுப்பு சத்தை குறைக்கக்கூடியது..

அரசாணிக்காய்:

வெறும் 100 கிராம் அரசாணிக்காயை நன்றாக கழுவி, தோலுடன் சேர்த்து ஜூஸ் போட்டு, வெறும் வயிற்றில் குடித்தாலே எந்த நோயும் நெருங்காது என்கிறார்கள்… இதனால், உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேறுவதுடன், உடல் எடையும் குறையும்..

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், ஒரு டம்ளர் அரசாணிக்காயில் ஜூஸ் தயாரித்து, அத்துடன் தேன் கலந்து குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்.. தீப்புண்களை ஆற்றும் தன்மை இந்த குளிர்ந்த காய்க்கு உள்ளது.. அதேபோல கொப்புளங்களையும் குணப்படுத்தும்.. பித்தத்தை போக்கும் குணம் இந்த அரசாணிக்காய்க்கு உண்டு..

தலைமுடி வளர்ச்சி:

குளிர்ச்சி அதிகம் என்பதால், இந்த காயை ஜூஸ் போல அரைத்து, தலைக்கு தடவி குளிக்கலாம். இதனால், தலைமுடி கொட்டுவது நிற்கும்.. சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் 3 வேளை என 10 நாட்களுக்கு அரசாணிக்காயில் ஜூஸ் தயாரித்து, அரை டம்ளர் குடித்துவந்தாலே, சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.. ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பும் நீங்கும். இதனால், மாரடைப்பு வருவது தடுக்கப்படுகிறது.

இந்த காயை அடிக்கடி சமையலில் சேர்த்து வந்தால், உடலிலுள்ள பித்தம் போக்கும், பசியை தூண்டும், சிறுநீர் பெருகும்.. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்று பொருமல் இப்படி பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். பசியை தூண்டுவதுடன், குடல் சம்பந்தமான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும்.. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு அருமருந்துதான் இந்த அரசாணிக்காய்.

ஆரோக்கிய விதைகள்:

இந்த அரசாணிக்காயின் விதைகளும் சத்துக்கள் நிறைந்தது.. இந்த காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி பெறும்.. இந்த விதைகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. அதனால், தினமும் ஒரு டீஸ்பூன் அரசாணிக்காயின் விதையை தினமும் எடுத்து கொண்டால், ஆரோக்கியம் மேம்படும்.. இந்த அரசாணிக்காய் இலைகளிலும் சத்துக்கள் உள்ளது.. இந்த இலைகளையும் சமைக்கலாம்..

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், ஒருசில எதிர்மறை விளைவுகளையும் இந்த காயில் உள்ளது என்கிறார்கள்.. அதாவது, இந்த பரங்கிக்காய், உடலில் கெட்ட ரத்தத்தை தோற்றுவிக்கக்கூடியதாம்.. வாத குணமும் உள்ளது. பலமற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இதை சாப்பிட்டால், உடம்பை மேலும் உருக்கிவிடுமாம். அதனால், நோயுற்று உடல் மெலிந்தவர்கள் இந்த பரங்கிக்காயை சாப்பிட வேண்டாம் என்பார்கள்.. எனினும், இதுகுறித்து உறுதியாய் தெரியவில்லை.

Related Post

”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை – திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?

Posted by - December 30, 2024 0
ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து பேசியது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் அறிக்கை: தமிழக வெற்றிக்கழகம்…

திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

Posted by - April 13, 2023 0
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக நகரமன்ற உறுப்பினர்: கடலூர்…

மூட்டுக்களை வலுவாக்கும் கருடாசனம்

Posted by - March 9, 2023 0
வடமொழியில் ‘கருட’ என்றால் ‘கருடன்’ அல்லது ‘கழுகு’ என்று பொருள். கருடாசனம் ஆங்கிலத்தில் Eagle Pose என்று அழைக்கப்படுகிறது கருடாசனம் என்ற ஆசனத்தின் பெயருக்குப் பின்னால் இருப்பது…

ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்

Posted by - April 16, 2025 0
பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா…

வர்த்தக சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்தது- ரூ.1945-க்கு விற்பனை

Posted by - July 1, 2023 0
சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப விலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *