வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகுது கனமழை!

307 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆங்காங்கே விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாக வானிலை ஆய்வு மையம் வரையறுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் தென்னிந்திய பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, தெற்கு கர்நாடகா, தெற்கு ஆந்திரா, ராயலசீமா பகுதிகள் அதிக மழையை பெறும்.

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இது உள்ளது.இந்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இதனால் இன்று தமிழ்நாட்டில் மிக கனமழையும் அடுத்த 5 தினங்களுக்கு கனமழையும் பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் வரை தமிழகம், புதுவை, காரைக்கல் பகுதிகளில் இயல்பை விட 43% குறைவாக பதிவாகி உள்ளது. பதிவான மழையின் அளவு 98 மி.மீ ஆனால் இந்த காலகட்டத்தின் இயல்பான அளவு 171 மி.மீ ஆகும்.

கடந்த 123 ஆண்டுகளில் 9ஆவது முறையாக குறைவான அளவு மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்ங்களில் இயல்பை விட மிக குறைவான அளவு மழையும் பதிவாகி உள்ளது

Related Post

17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 19 வயது பெண் போக்சோவில் கைது..! நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

Posted by - December 17, 2022 0
சிறுவனின் தந்தை தனது மகனை ஏமாற்றி சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதாக இளம் பெண் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நாகையில் 17 வயது…

ஆளுநருக்கு நோ சொன்ன அஜித்குமார்.. இந்த விளையாட்டு எல்லாம் விஜய்யோடு நிறுத்திக்கங்க பாஸ்!

Posted by - February 15, 2025 0
என்னதான் வெளி உலகத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என அஜித் காட்டிக் கொண்டாலும் நாட்டு நடப்புகளை அப்டேட்டில் வைத்திருக்கிறார் போல. அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது.…

3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Posted by - December 29, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக…

“நயன்தாராவின் அப்பாவாக நடிக்கும் சீமான்! படத்தின் கதை இதுதானா?!”

Posted by - January 4, 2024 0
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா…

இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை – தென்காசியில் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே இடத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *