அடிக்கடி டென்டல் செக்கப் பண்ண வேண்டியது அவசியம்.. ஏன் தெரியுமா..?

290 0

பல் வலி அல்லது பிற பல் சார்ந்த கோளாறுகள் மிகவும் பொதுவான அதே சமயம் வலி மிகுந்த மற்றும் பெரும்பாலும் நிராகரிக்கப்படும் ஒரு பிரச்சனை. எனவே உங்களது பல் சார்ந்த பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிவதற்கு நீங்கள் பல் மருத்துவருடன் வழக்கமான தொடர்பில் இருக்க வேண்டும்.

நம்மில் பலர் உடல் ஆரோக்கியம் மற்றும் அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வாயின் ஆரோக்கியத்திற்கு கொடுப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குவதில் ஆரம்பித்து, வழக்கமான டென்டல் செக்கப் செய்வது வரை நமது வாயின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு நாம் செய்யக்கூடிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக வாயின் சுகாதாரம் அமைகிறது.

பல் வலி அல்லது பிற பல் சார்ந்த கோளாறுகள் மிகவும் பொதுவான அதே சமயம் வலி மிகுந்த மற்றும் பெரும்பாலும் நிராகரிக்கப்படும் ஒரு பிரச்சனை. எனவே உங்களது பல் சார்ந்த பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிவதற்கு நீங்கள் பல் மருத்துவருடன் வழக்கமான தொடர்பில் இருக்க வேண்டும். இப்போது இந்த பதிவில் நீங்கள் ஏன் வழக்கமான முறையில் டென்டல் செக்கப் செய்து கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்:

வழக்கமான மற்றும் சரியான நேரத்தில் டென்டல் செக்கப்கள் செய்வது உங்கள் வாயின் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிப்பதற்கும், அதன் மூலமாக உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவக்கூடிய ஒரு திறவுகோல்.

அடிக்கடி நீங்கள் டென்டல் செக்கப் செய்து கொள்ளும் பொழுது பற்சிதைவு, ஈறு தொடர்பான நோய்கள், ஓரல் கேன்சர் மற்றும் இது போன்ற பிற வாய் சார்ந்த கோளாறுகளை தவிர்க்கலாம்.ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பல் மருத்துவரை சந்திப்பது வாய் தொடர்பான நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை பெறுவதற்கு உதவும். இதன் மூலமாக நீங்கள் நோய்கள் தீவிரமாவதை தடுக்கிறீர்கள். பொதுவாக நம் உடம்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பொழுது அதனை ஒரு சில அறிகுறிகள் மூலமாக ஓரளவு நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் வாய் கோளாறுகளை பொருத்தவரை அதனை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இதனை பல் மருத்துவர் சந்திப்பதன் மூலமாக நாம் எதிர்கொள்ளலாம்.

இறுதியாக வழக்கமான டென்டல் செக்கப் செய்து கொள்வது பற்கள் மற்றும் தாடை எலும்புகளின் அவ்வப்போது X-ray எடுப்பதற்கு உதவுகிறது. எனவே உங்கள் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவதற்கு டென்டல் செக்கப் என்பது அவசியமான ஒன்றாகும். ஆகவே பல் மருத்துவரை சந்திப்பதை உங்கள் வழக்கத்தின் ஒரு பகுதியாக வைத்துக்கொண்டு உங்கள் வாயின் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் கவனித்துக் கொள்ளுங்கள்.

Related Post

இந்த பிரபல நடிகை பாக்கியாவாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கிறாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்

Posted by - August 1, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் டாப் TRPயில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி . பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக தான் பாக்கியலட்சுமி சீரியல்…

வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted by - January 6, 2023 0
வாரிசு ட்ரைலர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வருகிற 11ஆம் தேதி வெளியகிறது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்த நிலையில், யூடியூப்பில் பல சாதனைகளை படைத்து வருகிறது.…

நயன்தாராவுடன் ஏற்பட்ட கருந்து வேறுபாடு உண்மை தான்!! நடிகை திரிஷா பேட்டி

Posted by - June 24, 2024 0
திரிஷா, நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திரிஷா மற்றும் நயன்தாரா வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் ஹீரோக்களுக்கு சமமாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது இருவருமே…

தோழியுடன் நீச்சல் குளத்தில் நடிகை சமந்தா.. இன்ஸ்டாகிராம் பதிவு, வைரலாகும் புகைப்படம்

Posted by - November 14, 2023 0
நடிகை சமந்தா திரையுலகில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட டாப் 3 நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் மயோசிட்டில் நோயால் பாதிக்கப்பட்ட பின் தொடர்ந்து படங்களில் நடிப்பதில்லை.…

பாக்கியலட்சுமி முடிகிறதா.. புது சீரியலில் நடிக்க தொடங்கிய சுசித்ரா! அதுவும் வேறொரு சேனலில்

Posted by - February 20, 2025 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த பல வருடங்களாக சின்னத்திரையில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த தொடரில் கோபி மற்றும் ராதிகா இருவரும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்துவிட்டனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *