ஒரு கப் அரிசி மாவும், மைதாவும் இருக்கா? இப்படி போண்டா செய்யுங்க.. ருசியா இருக்கும்…

202 0

தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படி குளிர்ச்சியான காலநிலையில் குறிப்பாக மாலை வேளையில் பலருக்கும் காரசாரமாகவும், மொறுமொறுப்பாகவும், சூடாகவும் சாப்பிடத் தோன்றும்.

உங்களுக்கும் அப்படி தோன்றுகிறதா? மாலை வேளையில் என்ன ஸ்நாக்ஸ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அரிசி மாவும், மைதாவும் உள்ளதா? அப்படியானால் அந்த பொருட்களைக் கொண்டு போண்டா செய்யுங்கள்.

இந்த அரிசி மாவு போண்டா மாலை வேளையில் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். உங்களுக்கு அரிசி மாவு போண்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி மாவு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.ஒரு கப் அரிசி மாவும், மைதாவும் இருக்கா? இப்படி போண்டா செய்யுங்க.. ருசியா  இருக்கும்... | Arisi Maavu Bonda Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* அரிசி மாவு – 1/2 கப்

* மைதா – 1 கப்

* ரவை – 1 டீஸ்பூன்

* தயிர் – 1/4 கப்

* தண்ணீர் – 1/2 கப்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – 1 கையளவு (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

* பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, மைதா, ரவை, தயிர், தண்ணீர் ஊற்றி போண்டா பதத்திற்கு பிசைந்து, 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் பேக்கிங் சோடாவை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு சிறு போண்டாக்களாக எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான அரிசி மாவு போண்டா தயார்.

Related Post

சன் டிவியின் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்- ரசிகர்களே கவனித்தீர்களா, எந்த தொடர் தெரியுமா?

Posted by - February 28, 2024 0
சன் டிவி சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் தான் டிஆர்பியின் உச்சத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கயல் தொடர் தான் டாப்பில் இருந்தது, ஆனால் இப்போதெல்லாம்…

இந்த இன்சுலின் இலை தினமும் ஒன்னு காலையில சாப்பிட்டா சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்…

Posted by - November 22, 2025 0
இன்சுலின் செடி என்றழைக்கப்படும் இந்த செடி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதை…

பிக் பாஸ் செல்வதை உறுதி செய்த முன்னணி குக் வித் கோமாளி பிரபலம்! போட்டோவுடன் இதோ

Posted by - September 8, 2023 0
விஜய் டிவியில் பிக் பாஸ் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி வைரல் ஆகி இருக்கும் நிலையில் எப்போது ஷோ தொடங்கும் என்று தான்…

விஜய் டிவிக்கு வரப்போகும் நடிகை சிம்ரன், ஷோவா, சீரியலா?…. வெளிவந்த அட்டகாசமான தகவல்

Posted by - May 27, 2024 0
விஜய் டிவி சீரியல்கள் என்றால் அதற்கு பெயர் போன தொலைக்காட்சியாக சன் டிவி உள்ளது. அப்படி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்றால் விஜய் தொலைக்காட்சி தான்,…

பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக 3 சீரியல்களை முடிக்க பிளான் போட்ட விஜய் டிவி- இந்த தொடர்களா?

Posted by - August 30, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியில் எல்லோரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் 2வது வாரத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *