கள்ளக்காதல் ஜோடியை திட்டம் போட்டு சிக்க வைத்த வாலிபர்கள்: இளம்பெண் தற்கொலை முயற்சி

355 0

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இந்தநிலையில் கணவன் -மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த திருமணம் ஆகாத 29 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபர் மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.செய்திகள்

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்தார். பின்னர் 2 பேரும் வீட்டில் ஜாலியாக இருந்தனர். வாலிபர் வீட்டில் இருப்பதை பார்த்த சிலர் வேண்டும் என்றே திருடன்… திருடன்… என சத்தம் போட்டனர். இதனையடுத்து இளம்பெண்ணின் வீட்டு முன்பு ஊர் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள் இளம்பெண்ணின் வீட்டிற்குள் இருந்த வாலிபரை பிடித்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை காதலிப்பதாகவும் அவர் அழைத்ததின் பேரில் வந்ததாகவும் வாலிபர் கூறினார். இளம்பெண்ணும் தான் அழைத்ததின் பேரில் தான் வாலிபர் வந்ததாகவும், எனவே நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என போலீசாரிடம் கூறினார்.

இதனையடுத்து போலீசார் வாலிபரை விடுவித்தனர். வெளியே சென்ற வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் வடக்கிப்பாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விஷம் குடித்தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாலிபர் திருமணம் செய்ய மறுத்து விட்டதால் மனவேதனை அடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய இந்த நிலைக்கு வாலிபர் தான் காரணம் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

“2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை

Posted by - October 25, 2024 0
உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.…

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்

Posted by - June 3, 2025 0
கன்னட மொழி குறித்த் கருத்திற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலுக்கு கெடு விதித்துள்ள நிலையில் கன்னட திரைப்பட சங்கத்திற்கு கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் தக்…

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: யாரெல்லம் தகுதியானவர்கள்; விண்ணப்பிப்பது எப்படி… முழு விவரம்!

Posted by - April 22, 2024 0
ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித…

தாய்கோ வங்கியில் ரூ. 94 லட்சம் மோசடி- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

Posted by - August 5, 2023 0
சேலம்: சேலம் 4 ரோடு அருகே தாய்கோ வங்கி உள்ளது. இங்கு 2010-ம் ஆண்டு தொடங்கி 2020 வரை போலி நககைளை அடகு வைத்து ரூ. 94…

“மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை” தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!

Posted by - March 14, 2025 0
தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே தமிழக பட்ஜெட் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *