மீனுடன் “இதை” சாப்பிடாதீங்க.. முள்ளங்கியுடன் சேர்க்க கூடாத பொருள் இதுதான்.. கீரை + தயிர் = விஷம்

281 0

சென்னை:

மீன்கள் பல நன்மைகளை நமக்கு தந்தாலும், எந்தெந்த பொருளுடன் மீனை சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா?

2 வேறு உணவுப்பொருட்கள் ஒரே குணத்தை பெற்றிருந்தால், அவை உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதற்கு சிறந்த உதாரணம் மீன் + முட்டை.

மீனுடன் முட்டையை சேர்த்து சாப்பிடக்கூடாதாம்.. ஒன்றன் பின் ஒன்றாகவும் சாப்பிடக்கூடாதாம்.. இரண்டுமே புரோட்டீன் நிறைந்த உணவு என்பதால், புரத ஒவ்வாமையை இவைகள் ஏற்படுத்திவிடுவதுடன், தோல் வெடிப்புகளையும் தந்துவிடும். அதனால்தான், மீன், முட்டையை ஒருசேர சாப்பிடுவதை தவிர்க்க சொல்கிறார்கள். மீன், கருவாடு இதில் எது சாப்பிட்டாலும், பால், தயிர் சாப்பிடக்கூடாது.மீனுடன் "இதை" சாப்பிடாதீங்க.. முள்ளங்கியுடன் சேர்க்க கூடாத பொருள் இதுதான்..  கீரை + தயிர் = விஷம் | Do you know the Excellent Health Benefits of Fish  and Can we Eat Fish with ...

கீரைகள்:

தயிருடன், மீன், கீரைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது.. காரணம், செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை தயிருக்கு நிறையவே உண்டு.. சத்துக்கள் அதிகம் நிறைந்த மீன்களுடன், தயிரை சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் தாமதமடைந்து, சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும். எனவே, மீன், தயிர் இரண்டையும் தனித்தனியாக சாப்பிடுவதே ஆரோக்கியம் என்கிறார்கள். அதேபோல, மீன்களுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்..

இவைகளை ஒன்றாக சாப்பிட்டால், சளி, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளை தந்துவிடும்.. அதேபோல, திப்பிலியுடன் மீன் சேர்த்து சாப்பிட்டால், குடல் பாதிப்பு வந்துவிடும்.. அதனால், மீன் பொறித்த எண்ணெய்கூட, திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என்று ஆயுர்வேதத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்.

எதிரெதிர் விளைவு:

ஒரே குணங்களை கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிட்டால் எதிர்விளைவுகள் ஏற்பட்டுவிடுவதைபோல, எதிரெதிர் குணங்களை கொண்ட உணவுப்பொருட்களையும் நாம் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதற்கு சரியான உதாரணம், பிரியாணியில் நாம் சாப்பிடும் தயிர் வெங்காய பச்சடிகள்தான்.. இந்த பச்சடியை தவிர்க்க சொல்கிறார்கள். காரணம், தயிரை பொறுத்தவரை குளிர்ச்சியை தரக்கூடியது, வெங்காயம் சூட்டை கிளப்பிவிடக்கூடியது.. எதிரெதிர் குணங்களை கொண்டதால், இவைகளை சேர்த்து சாப்பிடுவது அஜீரணத்தை தந்துவிடுகிறது..

வாழைப்பழம்:

அதனால்தான், அசைவத்துடன் வெறும் வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.. ஆனால், தயிரோடு மட்டும் கலந்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அதேபோல, வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது… வாழைப்பழம் சாப்பிட்டதுமே, தயிர், மோர் சாப்பிடக்கூடாது. தேனும், நெய்யும் சேர்த்து சாப்பிடக்கூடாது. வெண்ணெயுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்து சாப்பிடக்கூடாது.

தவிர்க்கலாம்:

ஒருமுறை, பிரபல ஆயுர்வேத டாக்டர். ரேச்சேல் ரெபெக்கா ஒரு பேட்டியில் சொன்னபோது, “அஜீரணம் தரக்கூடிய உணவுகளை தவிர்த்தாலே, நமக்கு ஆரோக்கியம் நிச்சயம்.. மீனுடன் தயிருடன் சாப்பிடக்கூடாது.. நல்லெண்ணெய்யில் இறைச்சியில் சமைக்கக்கூடாது.. நாம் சாப்பிட்டதுமே தூங்கக்கூடாது.. உஷ்ணமான உணவை சாப்பிட்டதும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவை சாப்பிடக்கூடாது.. குளிர்ச்சியான கற்றாழை ஜூஸ் குடிக்கிறோம் என்றால், உடனே அன்னாசி, பப்பாளி போன்ற சூடு தரக்கூடிய உணவுகளை சாப்பிடக்கூடாது.

உருளைக்கிழங்கு:

நமக்கு பெரும்பாலான உடல்நல கோளாறுகள் ஏற்பட காரணமே அஜீரணம்தான்.. அதனால், உளுந்து, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், தயிர், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற அஜீரணம் தரக்கூடிய உணவுகளை தவிர்த்தாலே போதும்.. சுருக்கமாக சொல்லப்போனால், ஜீரணம் நமக்கு எளிதாகிவிட்டாலே, நோய்கள் அண்டாது” என்கிறார்.

Related Post

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

Posted by - June 30, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்களும், காவல்துறையில் நடக்கும் அவலங்களும் ஆளுங்கட்சியான திமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…

சுழன்று அடித்த மாண்டஸ் புயல்.. வேரோடு சாய்ந்த 48 மரங்கள்

Posted by - December 10, 2022 0
Mandous cyclone : நேற்று மாலை 7 மணியிலிருந்து நள்ளிரவு 1 மணி வரை 48 மரங்கள் கீழே விழுந்துள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.மாண்டோஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை…

சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Posted by - June 18, 2023 0
சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய், சினிமாவை…

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 22, 2024 0
அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், 22,931 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு…

”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை – வானிலை அறிக்கை

Posted by - October 27, 2025 0
TN weather Montha Cyclone Update: மோன்தா புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *