சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இந்த 6 பழமும் நீரிழிவு நோயாளி சாப்பிடலாம்.. என்ன பாருங்க

252 0

சென்னை:

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கள், பழங்கள், பருப்புகள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்? ஆரஞ்சு பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ளக்கூடியது பருப்பு வகைகளாகும்.. காரணம், பருப்புகளில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவு என்பதுடன், நார்ச்சத்துக்களும் அதிகமாக இருக்கின்றன. இவைகள் இரண்டுமே ரத்த சர்க்கரை அளவை அதிகமாக பாதிக்காது…

விதைகள்:

இவைகளுடன் விதைகள், கீரைகளை உணவில் சேர்த்து கொள்ளும்போது, வைட்டமின்கள், கொழுப்புகள், புரதங்கள், இரும்புச்சத்துக்கள் என அனைத்துமே சேர்ந்தும் கிடைத்துவிடுகிறது.சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இந்த 6 பழமும் நீரிழிவு நோயாளி  சாப்பிடலாம்.. என்ன பாருங்க | Do you know the Health Benefits of Orange  Fruit and what are the ...

வெள்ளை அரிசி, உருளைக்கிழங்கு என கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைவிட, பீன்ஸ், கோஸ், அருகம்புல் போன்ற நிறைய நார்ச்சத்தும், தாதுக்களும் உள்ள உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, பாகற்காய் போன்றவற்றையும், முட்டை, பால் பொருட்கள், சிக்கன், மீன் என புரோட்டீன் நிறைந்த உணவுகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

பழங்கள்:

பழங்களை பொறுத்தவரை, அதிக சர்க்கரை அளவு கொண்ட பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.. குறிப்பாக, ஒரு பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவு 70 முதல் 100 வரை இருந்தால், அந்த பழங்களில் நிறைய சர்க்கரை அளவு உள்ளது என்று பொருள். இது காய்கறிகளுக்கும் பொருந்தும்.. எனவே, கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை தவிர்த்துவிடலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு, நெல்லிக்காயைவிட சிறந்த பழம் வேறில்லை.. வைட்டமின் C, நார்சத்துக்கள் அதிகம் உள்ள பழம் இதுவாகும்.. இதற்கு அடுத்தபடியாக, அதிக சத்துள்ள கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். அதேபோலஆரஞ்சு, திராட்சை பழங்கள், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கக்கூடியது.. பப்பாளியில் சர்க்கரையின் அளவு என்பதால் தாராளமாக சாப்பிடலாம்..

மாதுளம்பழங்கள், ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன. ஆப்பிள் பழங்கள், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன. தர்பூசணிகள், உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகின்றன. தவிர்க்க வேண்டியது: உலர்ந்த பிளம்ஸ், அன்னாசிப்பழம், பழுத்த வாழைப்பழங்கள், ஆரஞ்சு, உலர்ந்த திராட்சை, திராட்சை மற்றும் பேரீச்சம்பழம், மாம்பழம், போன்ற இனிப்பு பழங்களை தவிர்க்கலாம். மா, பலா, வாழை என்ற முக்கனிகளை தவிர்க்கலாம்.

ஆனால், கிவி பழத்தை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் என்கிறார்கள்.. காரணம், இந்த பழத்தில் வைட்டமின் A, C, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். சர்க்கரையின் அளவை குறைக்க, பெர்ரீ பழங்கள் அபரிமிதமாகவே உதவுவதால், இதை தைரியமாகவே சாப்பிடலாம்.

பொட்டாசியம்:

அதேபோல, ஆரஞ்சு பழம், கிட்டத்தட்ட ஒரு மருந்துபோலவே, சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படுகிறது. நார்ச்சத்து, வைட்டமின் C, ஃபோலேட், பொட்டாசியம் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயிலிருந்து விடுபட பெரிதும் துணைபுரிவது, இந்த ஒரு பழமாகத்தான் இருக்க முடியும்.

அவகடோ பழங்களை பொறுத்தவரை, ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவையாகும்.. ஏகப்பட்ட வைட்டமின்களும், தாதுக்களும் இந்த பழத்தில் உள்ளதுடன், நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், நீரிழிவு அபாயத்தை இந்த அவகேடோ பழங்கள் குறைப்பதாக சொல்கிறார்கள்.

Related Post

சட்டென்று மாறிய வானிலை… கொட்டித் தீர்த்த கனமழை… இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா?

Posted by - May 31, 2023 0
சென்னை மற்றும் புறநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம்…

‘இந்தி தெரியாது போடா’ என சொல்லிவிட்டு இப்ப ‘கேலோ இந்தியா’-வாம்… சூடு, சொரணை இல்லாத உதயநிதி – நடிகை விந்தியா விமர்சனம்

Posted by - January 29, 2024 0
திமுக இளைஞரணி மாநாடு பயனுள்ளதாக இல்லை என்றும், அது சர்க்கஸ் மாநாடு என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா கிண்டலடித்துள்ளார். பழனியில் முன்னாள்…

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: பெட்ரோல், டீசல் விலையில் 580-வது நாளாக மாற்றமில்லை

Posted by - December 22, 2023 0
கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தையில் இந்தியா பண மதிப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.…

“மியூட் மோடில் திமுக அரசு” தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்

Posted by - June 5, 2025 0
“80 வயது மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை? ஒரு முதல்வராக இந்த செய்தியெல்லாம் ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை?” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.…

“பண்பாடு இல்லாமல் பேசுவதால் வேதனை” – ஈபிஎஸ் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Posted by - November 13, 2024 0
அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார். அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *