அதிகாலையில் வந்த அலர்ட்! அடுத்த 3 மணி நேரம்.. சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை மையம்

268 0

சென்னை:

அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உட்பட மொத்தம் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் கடந்த இரண்டு நாட்களாகச் சென்னையில் ருத்ர தாண்டவம் ஆடியது. பல மணி நேரம் கொட்டி தீர்த்த இந்த அதீத கனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் மொத்தமாக முடங்கிப்போனது.

மழை இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்த போதிலும், இந்தளவுக்கு ஒரு கனமழை இருக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. திங்கள் இரவு தொடங்கிய மழை பல மணி நேரம் கேப் விடாமல் கொட்டி தீர்த்தது.அதிகாலையில் வந்த அலர்ட்! அடுத்த 3 மணி நேரம்.. சென்னை உட்பட 8 மாவட்டங்களில்  மழை இருக்கு- வானிலை மையம் | For next three hours 8 districts including  Chennai will get rain says ...

மிக்ஜாம்:

இதனால் சென்னையில் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியது. மழை நின்ற பிறகு நேற்று முதல் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்று முக்கிய பகுதிகளில் மழை நீர் வடிந்த நிலையில், போக்குவரத்தும் மெல்ல வழக்கம் போல ஆரம்பித்தது. இன்று மற்ற பகுதிகளிலும் மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துவிட்ட நிலையில், மழை நின்றுவிட்டது அடுத்த 3 மணி நேரத்தில்: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் சில இடங்களில் டிராபிக் நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம்:

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் டிச. 8ஆம் தேதி: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

டிச 9ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. டிச 9, 11 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் ” என்று கூறப்பட்டிருந்தது.

Related Post

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Posted by - March 25, 2024 0
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2…

”தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்! சாதி வாரி எப்போ நடத்த போறீங்க..” அன்புமணி வார்னிங்

Posted by - February 11, 2025 0
“69 %இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்றால் முதலில் சென்னையில்…

”களத்திற்கே வராத தற்குறி தளபதி” விஜயை கடுமையாக விமர்சித்த திமுக அமைச்சர் சேகர்பாபு

Posted by - December 7, 2024 0
Minister SekarBabu: ”களத்திற்கே வராத தற்குறி” தான் விஜய் என திமுக அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். Minister SekarBabu: வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…

நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை

Posted by - January 10, 2025 0
தமிழ்நாடு சட்டப்பேரவையில், ”யார் அந்த சார்” என்ற பேட்சுடன் அதிமுகவினர் வந்த நிலையில் , இன்று திமுகவினர் ”இவன் தான் அந்த சார்” என்ற புகைப்படத்துடன் வந்தது…

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 22, 2024 0
அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், 22,931 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *