முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தூத்துக்குடி செல்கிறார்: இன்று மத்திய குழு ஆய்வு செய்கிறது

198 0

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடிக்கு நாளை மறுநாள் வருகிறார் மு.க ஸ்டாலின்.. பயண திட்டத்தில்  திடீர் மாற்றம் ஏன்? பின்னணி | TN Chief Minister Stalin is coming to  Thoothukudi day after ...
இதனை எதிர்கொள்ளவும், மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் அப்பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை, காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசுத்துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த சூழ்நிலையில் முன்னதாக இன்று தூத்துக்குடிக்குச் செல்வதாக அறிவித்திருந்த முதலமைச்சர், மத்தியக் குழு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உடனிருக்க வேண்டிய நிலையைக் கருத்தில் கொண்டு நாளை ஆய்வு மேற்கொள்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

உடனே விண்ணப்பிங்க!

Posted by - August 6, 2025 0
அரசு வெளியிட்ட தகவலின்படி, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 29, 2025-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். சென்னை: தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள…

2023 சென்னை வெள்ளத்தை விடுங்க! 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன? இரவில் பறந்த அந்த ஆர்டர்

Posted by - December 13, 2023 0
சென்னை: கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மிக்ஜாம் புயலால்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Posted by - September 12, 2023 0
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புள்ளவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புடையவர்கள்…

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் – இப்படியா பண்றது?

Posted by - May 13, 2025 0
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை அனைவரும் வரவேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டின் இரு தலைவர்களுக்கிடையே எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. ஸ்டாலின், இபிஎஸ்-ன் பதிவுகள் என்ன.? பார்க்கலாம்……

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், வாகன வசதி- ஊர் பொதுமக்கள் அறிவிப்பு

Posted by - April 13, 2023 0
சிவகிரி: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது மாரப்பம்பாளையம். இந்த ஊரில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *