அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், வாகன வசதி- ஊர் பொதுமக்கள் அறிவிப்பு

374 0

சிவகிரி:

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது மாரப்பம்பாளையம். இந்த ஊரில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்தது.அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், வாகன வசதி- ஊர்  பொதுமக்கள் அறிவிப்பு | Tamil News Free bicycle and vehicle facility for students  attending government schools

இந்த நிலையில் பெரும்பாலான கிராமங்களுக்கு தனியார் பள்ளி வாகனங்கள் அதிக அளவில் வருவதை பார்த்த ஊர் பொதுமக்களுக்கு அரசு பள்ளியிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

இதையடுத்து மாரப்பம்பாளையம் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 2023-24-ம் கல்வி ஆண்டில் சேருகிற மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் இலவச வாகன வசதி செய்யப்படும் என்று அப்பகுதி ஊர் பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த அறிவிப்புகள் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளனர். மேலும் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தனியார் பள்ளிக்கு இணையாக இந்த கல்வி ஆண்டில் அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற முனைப்போடு ஊர்பொதுமக்கள் அறிவித்துள்ள இலவச சைக்கிள், இலவச வாகன வசதி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related Post

”கேஸ் வாங்குறதுலாம் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி..” மீண்டும் சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன்!

Posted by - December 27, 2022 0
செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா? – டிடிஎஃப் வாசன் நம்மை விரட்டியே…

2025 முடிவுக்கு முன் Tamil Nadu-வில் நடந்த முக்கிய 10 மாற்றங்கள் – Technology, Health, Lifestyle updates!

Posted by - December 12, 2025 0
2025 முடிவுக்கு வந்துட்டோம். இந்த வருடம் technology, health, education, lifestyle, economy எல்லாத்திலும் பெரிய மாற்றங்கள் நடந்துது. Tamil Nadu-வில் இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட,…

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பிச்சைக்காரர்- நாமக்கல் கலெக்டரிடம் வழங்கினார்

Posted by - February 20, 2023 0
நாமக்கல்: நாமக்கல் பிச்சையெடுப்பவர்கள், ‘ஐயா தர்மபிரபு ஏதாவது தர்மம் பண்ணுங்க’ என்று யாசகம் பெறுவது வழக்கம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் தனக்கு கிடைத்த பணத்தை…

விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி..

Posted by - March 11, 2026 0
விஜய் குறித்து நான் பேச வேண்டிய நிலை வந்தால் தயார் என தன் மீதான் விமர்சனங்களுக்கு இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதில் தெரிவித்துள்ளார். விஜய் விவகாரம்…

போலீஸ் போட்ட 33 நிபந்தனைகள்.. திராவிட கட்சிகளுக்கு சவால் விட்டு சரித்திரம் படைப்பாரா TVK விஜய்?

Posted by - September 26, 2024 0
சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியின் கொடியும், கொடிப்பாடலும் சமீபத்தில் அவரே வெளியிட்டார். கொடி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *