தமிழக அரசு பஸ்கள் இயங்கவில்லை- பயணிகள் அவதி

241 0

புதுச்சேரி:

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதன்படி இன்று வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. புதுவையை பொறுத்தவரை நகரம், கிராமப்பகுதிகளுக்கு அதிகளவில் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

தமிழக அரசு பஸ்கள் இயங்கவில்லை- பயணிகள் அவதி | Tamil Nadu government buses  are not running in Puducherry, passengers suffer
ஆனால் புதுவையிலிருந்து தமிழக பகுதிக்கு அதிகளவில் தமிழக அரசு பஸ்கள்தான் இயக்கப்படுகிறது. இதில் புதுவை வழியாக தமிழக பகுதிக்கு செல்லும் அரசு பஸ்கள், புதுவையிலிருந்து இயக்கப்படும் அரசு பஸ்களும் அடங்கும்.

சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், வேளாங்கன்னி, கும்பகோணம், காரைக்கால், கடலூர் பகுதியிலிருந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் புதுவை பஸ்நிலையம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர்.

புதுவை உப்பளம் அம்பேத்கார் சாலையில் உள்ள அரசு பணிமனையில் 54 பஸ்களும், மறைமலை அடிகள் சாலையில் உள்ள பணி மனையில் இருந்து 22 பஸ்களும் இயக்கப்படுகிறது. தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழக பகுதியிலிருந்து மிக குறைந்த எண்ணிக்கையில் ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அலை மோதியது. உப்பளத்தில் உள்ள தமிழக அரசு போக்கு வரத்துக்கழக பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Post

ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Nainar Nagenthran to be 13th Tamil Nadu BJP president….

Posted by - April 11, 2025 0
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த…

தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?

Posted by - May 21, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அடுத்த மாதம் வரும் அவருடைய பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல்…

‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..’ அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்…

Posted by - December 14, 2022 0
Udayanidhi Stalin | தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார்.…

சனி சஷ யோகம்: 2025-ல் பண வரவு முதல் புதிய வேலைவாய்ப்பு வரை.. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்!

Posted by - November 12, 2024 0
சனி தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். இது சஷ ராஜயோகத்தை உண்டாக்கும். இந்த காலம் மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். வேத ஜோதிடத்தில்,…

சென்னையை நெருங்கும் மிச்சாங் புயல்: வெளுத்து வாங்கும் மழை- பரங்கிமலை மெட்ரோ மூடல்

Posted by - December 4, 2023 0
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயலாக உருவானது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *