சென்னையை நெருங்கும் மிச்சாங் புயல்: வெளுத்து வாங்கும் மழை- பரங்கிமலை மெட்ரோ மூடல்

255 0

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயலாக உருவானது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில மழை தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 130 கி.மீ. தொலைவில் மிச்சாங் புயல் நிலை கொண்டுள்ளது. வடதமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை..!! அடுத்து எந்த மாவட்டங்களில் தெரியுமா..?  – Madhimugamநெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே நாளை நாளை முற்பகல் தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை காரணமாக சென்னை பரங்கிமலை பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4 அடி மழை வெள்ளம் தேங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மெட்ரோ ரெயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தை பயன்படுத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், மயிலாப்பூர் போன்ற இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Related Post

இந்து மக்கள் – திருமாவளவன் ஆவேசம்

Posted by - January 24, 2024 0
இந்திய நாடெங்கும் ஜாதி, மதத்தின் பெயரால் வன்முறை கொடுமைகள் தலை விரித்தாடி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் அப்பாவி இந்து மக்கள்…

கொட்டி தீர்த்த கனமழை.. இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் வெள்ளக்காடாக மாறிய சென்னை

Posted by - December 1, 2023 0
ஜி.கே.எம் காலனி ஜம்புலிங்கம் தெருவில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம்… சென்னையில் 2 ஆவது நாளாக இரவில் கனமழையால் பெய்ததால்…

அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றம்: தவறான சிகிச்சை என கணவர் குற்றச்சாட்டு

Posted by - September 28, 2023 0
சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனத் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (32). இவர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *