என்ன செய்தாலும் நீங்க சுடும் சப்பாத்தி சாஃப்டா வரலையா..? அப்போ இந்த டிப்ஸ் டிரை பண்ணி பாருங்க..!

199 0

என்னதான் தினமும் சப்பாத்தி சுட்டாலும் அதை சாஃப்டான பக்குவத்தில் சுட பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் அது அவ்வளவு பெரிய இரகசியமும் கிடையாது. மாவு பிசையும்போது சில விஷயங்களை பின்பற்றினாலே போதும் சாஃப்டான சப்பாத்தியை சுடலாம். #chappathi #food #eat #weight

முதலில், நீங்கள் சப்பாத்திக்கு மாவை பிசையும் முன், ஒரு சல்லடை கொண்டு மாவை சலிக்கவும். ஏனெனில் கோதுமை மாவில் அதிக தவிடு அல்லது உமி இருந்தால், சப்பாத்தி காய்ந்துவிடும்.நீங்கள் சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீர் பயன்படுத்துங்கள். அவ்வாறு தண்ணீர் ஊற்றிய பின் மாவை நீண்ட நேரம் நன்கு அழுத்தம் கொடுத்து பிசையவும். இப்படி செய்வதால் சப்பாத்தி மென்மையாக வரும்.மாவை பிசைவதற்கு முன், அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். இதன் மூலம், சப்பாத்தி சுவையும் நன்றாக இருக்கும். மேலும் சப்பாத்தி மென்மையாக மாறும்.மாவை பிசைந்த பிறகு சிறிது நேரம் மூடி வைக்கவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு, ஈரமான கைகளால் மாவை மீண்டும் ஒரு முறை பிசைந்து, பின்னர் சப்பாத்திக்கான மாவை திரட்டுங்கள்.சப்பாத்தி அதிக நேரம் சுவையாகவும் மென்மையாகவும் வைத்திருக்க விரும்பினால், மோர், தயிர் அல்லது பால் சேர்த்து மாவை பிசையவும். இதனால் சப்பாத்தி மிகவும் மென்மையாக இருக்கும். சில வாழைப்பழமும் சேர்ப்பதுண்டு.சப்பாத்தி சுடும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அதை தோசைக்கல்லில் வைத்து, அதை ஒரு முறை இரண்டு புறமும் சூடாக்கி பின் அதை அப்படியே எடுத்து நேரடியாக தீயில் காட்டினால் நன்கு உப்பி சாஃப்டாக வரும்.

Related Post

பிரியாணி பிரியரா நீங்க.? பின்னாடியே இருக்குற ஆபத்து பெரிசு…

Posted by - June 18, 2025 0
உணவு குறித்து வரும் உயிரிழப்பு செய்திகள் பார்க்கும்போது இயல்பாகவே நமக்கு படபடக்க ஆரம்பித்துவிடும். அதிலும் குறிப்பாக சமீபமாக பிரியாணி – மாரடைப்பு குறித்து செய்திகளுமே வந்த வண்ணம்…

டூத் பேஸ்டை பல் துலக்குவதற்கு மட்டுமல்ல.. இந்த ’6’ விஷயங்களுக்கும் யூஸ் பண்ணலாம்..!

Posted by - April 21, 2023 0
காலை எழுந்ததும் கைகளும் கால்களும் நேராக பேஸ்டை நோக்கி செல்லும். இனி அதற்காக மட்டுமல்ல இந்த விஷயங்களுக்கும் பேஸ்டை யூஸ் பண்ணலாம் என்பது தெரியுமா..? காலை கடனில்…

Top Cooku Doop Cooku சீசன் 2 எப்போது ஆரம்பம் தெரியுமா?

Posted by - July 30, 2025 0
குக் வித் கோமாளி விஜய் டிவியில் ரசிகர்கள் மிகவும் கொண்டாடும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. முதல் சீசன் படு வெற்றியடைய அடுத்தடுத்த சீசன்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 1800 கோடி வசூல் செய்த புஷ்பா 2.. எப்போது தெரியுமா

Posted by - April 6, 2025 0
புஷ்பா 2 சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.கடந்த ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே…

முருங்கைக்கீரையை வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க…

Posted by - September 22, 2023 0
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? இதுவரை முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முருங்கைக்கீரையைக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *