பிரியாணி பிரியரா நீங்க.? பின்னாடியே இருக்குற ஆபத்து பெரிசு…

179 0
உணவு குறித்து வரும் உயிரிழப்பு செய்திகள் பார்க்கும்போது இயல்பாகவே நமக்கு படபடக்க ஆரம்பித்துவிடும். அதிலும் குறிப்பாக சமீபமாக பிரியாணி – மாரடைப்பு குறித்து செய்திகளுமே வந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு எந்த அளவுக்கு அதிகமாகிறதோ அதே அளவுக்கு இரவு நேர பிரியாணி கடைகள் பெருகிவிட்டன. பெரும்பாலும் அனைவருக்குள்ளும் Mid -Night Cravings கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளது.
கொழுப்பும், எண்ணெயும் அதிகமுள்ள பிரியாணி நிச்சயமாக மாரடைப்பை அழைத்து வர முக்கிய காரணியாக உள்ளது. கடைகளில், பலமுறை பயன்படுத்திய எண்ணெயில் பிரியாணி செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பலர் எச்சரித்துள்ளனர். இருந்தும் கூட ‘தீவிர பிரியாணி பிரியர்கள் நம்மில் பலர் உண்டு.’ பிரியாணி சாப்பிடுவது தவறில்லை. ஆனால் எப்போது சாப்பிட வேண்டும்? எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? என்ற உணவு கட்டுப்பாடு தெரிந்திருக்க வேண்டும்.
வாரத்திற்கு ஒரு நாள் என்பதே போதுமானது என்கிறார். “நம்முடைய விருப்பத்திற்காக என்றாவது ஒரு நாள் மதியம் பிரியாணி சாப்பிடுவது தவறு இல்லை. ஆனால், பிரியாணியை தினமும் சாப்பிடுவது மற்றும் நள்ளிரவு, அதிகாலையில் சாப்பிடுவது உடல்நிலைக்கு நல்லது இல்லை. ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து, சர்க்கரை நோய் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். இது அனைத்தும் சேர்ந்துதான் மாரடைப்புக்கான முக்கிய காரணமாக அமைகின்றது.ஒரு நாளைக்கான எண்ணெய் பயன்பாடே 3 முதல் 5 டீஸ்பூன் தான் இருக்க வேண்டும். இதில் ஒன்று, இரண்டு கூறினால் பரவாயில்லை. மொத்தமாக எண்ணெய் அதிகம் உள்ள உணவு வகைகளை சாப்பிடும்போதுதான் இந்த சிக்கல் வருகிறது. நம்முடைய உடலில் உள்ள கொழுப்பு அளவை பொறுத்தே நம்முடைய உணவு பயன்பாடு அமைய வேண்டும். அதை தவிர்த்துவிட்டு கொழுப்பு அதிகம் உள்ள பிரியாணியை போன்ற உணவு வகைகளை தேடிச் செல்லும்போதுதான் நமக்கு அது பிரச்சினையாக வந்துவிடுகிறது. காலையில் 10 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. அதேபோல இரவு உணவை 7 மணிக்கு முன்பாகவே அதாவது சூரியன் மறைவதற்கு முன்பாக முடித்துவிட்டால் உணவினால் வரும் பிரச்சினைகளை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்” என்றார்.

Related Post

கோட்டைகாலத்திற்கு ஏற்ற குளு குளு பானம் எது தெரியுமா ?

Posted by - April 18, 2024 0
நன்னாரி சர்பத் செய்முறை மற்றும் அதன் பயன்கள் குறித்த செய்தித் தொகுப்பு. கோடை வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பருகப்படும் இயற்கை பானங்களான இளநீர், மோர், கரும்புச்சாறு, பதனீர்…

சினிமாவை தாண்டி நடிகர் விஜய் இத்தனை தொழில்கள் செய்கிறாரா?- இதுதான் முக்கிய தொழிலா?

Posted by - July 24, 2023 0
நடிகர் விஜய் தமிழ் சினிமா நடிகர் என்ற லிஸ்டில் பல வருடங்களாக ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். தரமான படங்கள், ரசிகர்களுடன் எப்போதும் பணிவாக இருந்து வரும்…

தக்காளி போல ஜொலிக்கும் சருமத்தை பெற… தக்காளியையும் மஞ்சளையும் ‘இப்படி’ முகத்துல யூஸ் பண்ணுங்க!

Posted by - September 23, 2023 0
அழகான பொலிவான சருமத்தை பெற யார்தான் விரும்ப மாட்டார்கள். ஆண், பெண் என அனைவரும் பொலிவான சருமத்தை பெற வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு தங்களால் முயன்ற…

மகாலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர்!..விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Posted by - September 28, 2023 0
ரவீந்தர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் மின்சாரம் தயாரிக்கலாம் என்று பாலாஜி என்பவரிடம் இருந்து பணம் வாங்கி…

விரைவில் முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்?

Posted by - September 14, 2023 0
சீரியலில் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஆகவே விரைவில் முடிவுக்கு வரலாம் என்கின்றன சின்னத்திரை வட்டாரங்கள். சீரியல் இந்த மாதம் இறுதியில் முடிவடையவிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *