இன்று மாத பிறப்பு.. மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்…!

250 0

இன்று மாத பிறப்பு.. மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்…!

மன வலிமை தரக்கூடிய மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.

எல்லா தெய்வங்களுக்கும் சிறப்பு மிக்க மாதம் என்று போற்றப்படுகிறது மாசி மாதம். திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்கிறது புராணம். மாசி மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தி மிக மிக விசேஷம். ஆழ்வார்களில் ஒருவரான, குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார்.

மாசி மாதம் என்பது மன வலிமை தரக்கூடிய மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர். சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

செய்ய வேண்டியவைகள்

1. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம்தான். எனவே, மாசி மாதத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்வது விசேஷம். அது மும்மடங்கு பலன்களைத் தரும்.

2. மகாபிரளய காலத்தில் கும்பத்திலிருந்து அமிர்தம் பரவி உலகம் மீண்டும் உருக்கொண்ட தினம் மாசி மகம். வருணதேவன் தன்னைப் பீடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்ற தினம் மாசி மகம். அம்பிகை ஒரு சங்காக அவதரித்து தாட்சாயணியாக மாறியதும் மாசி மகத்தில்தான். முருகனுக்குரிய வழிபாட்டு தினங்களில் மாசி மகம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் தவறாமல் சிவாலயம் சென்று வழிபடுவதன் மூலம் இன்னல்கள் நீங்கப்பெறலாம் என்பது நம்பிக்கை.3. பௌர்ணமி வழிபாடு அம்பிகைக்கு உரியது. மாசி மாதப் பௌர்ணமி தினம் சிவ வழிபாட்டுக்கும் முன்னோர் வழிபாட்டுக்கும் உரியது. அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாதப் பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது.4.இந்த நாளில்தான் ஹோலிப் பண்டிகை வருகிறது. கிருஷ்ணன், ராதையுடன் வண்ணப்பொடிகள் தூவி விளையாடிய தினம் இது என்பதால் இந்தப் பண்டிகை மிகவும் முக்கியமானதாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தவறாது இறைவழிபாடு செய்து நன்மைகளைப் பெறலாம்.

Related Post

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் – இப்படியா பண்றது?

Posted by - May 13, 2025 0
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை அனைவரும் வரவேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டின் இரு தலைவர்களுக்கிடையே எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. ஸ்டாலின், இபிஎஸ்-ன் பதிவுகள் என்ன.? பார்க்கலாம்……

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

Posted by - November 18, 2023 0
சென்னை: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். நடப்பாண்டு மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும்,…

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி! அண்ணாமலை பதவி பறிக்கப்பட்ட உடனே அறிவிப்பு!

Posted by - April 11, 2025 0
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதை அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிவித்தனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 100 நாடுகள் பங்கேற்பு

Posted by - August 21, 2023 0
சென்னை: பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் 2-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.…

சென்னையில் இருந்து விலகி சென்றது மிச்சாங் புயல்

Posted by - December 5, 2023 0
சென்னை: மிச்சாங் புயல் சென்னை அருகே வந்து மழை, காற்றால் துவம்சம் செய்தது. பின்னர் சென்னையில் இருந்து விலகி ஆந்திராவுக்கு சென்றது. நெல்லூர்-காவாலி இடையே இன்று (செவ்வாய்க்கிழமை)…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *