தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த ரவீந்திர ஜடேஜா….Sorry சர்பராஸ் கான்

192 0

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், பட்டிதார் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து, களமிறங்கிய மண்ணின் மைந்தன் ஜடேஜா, கேப்டன் ரோகித்துடன் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

தனது 11ஆவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்த ரோகித், டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ரோகித் 131 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்த வந்த சர்ப்ராஸ் கான், இங்கிலாந்தின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். ஆட்டம் நிறைவுபெறும் தருவாயில், ஜடேஜாவின் சிறு பிழையால் சர்ப்ராஸ் கான், 62 ரன்களில் ரன்-அவுட் ஆனார். ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 99 ரன்களுடன் சதத்தை எதிர்நோக்கி இருந்தார். அப்போது ஜடேஜா செய்த தவறால், சர்பராஸ் கான் ரன்அவுட்டானார். சர்பராஸ் கானின் ரன்அவுட்டுக்கு ரவீந்திர ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.News18“என்னுடைய தவறான அழைப்பால் அவுட் ஆனதற்கு வருந்துகிறேன் என்றும் சிறப்பாக விளையாடினீர்கள் என்றும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது தனது வாழ்நாளில் பெருமையான தருணம் என சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார். மேலும் ரன்அவுட் பற்றி பேசிய அவர், விளையாட்டில் அது சகஜம் என்று கூறினார். நீண்ட நேரம் களத்தில் இருந்தால் ரன்கள் தானாக வரும் என ஆலோசனை வழங்கிய ஜடேஜாவுக்கு நன்றி கூற வேண்டும் என்றும் சர்பராஸ் தெரிவித்தார்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் சேர்த்துள்ளது.

Related Post

கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்…

Posted by - May 1, 2023 0
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்திருந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப்…

கோட்டைவிட்ட வீரர்கள்… டிராவில் முடிந்த மொராக்கோ-குரோஷியா ஆட்டம் .

Posted by - November 23, 2022 0
இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எப்…

இறுதி ஓவரில் இரண்டு ஸ்டம்புகளை உடைத்த அர்ஷ்தீப் சிங்… அதன் விலை இத்தனை லட்சமா?

Posted by - April 23, 2023 0
மும்பைக்கு எதிரான போட்டியின் இறுதி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில்,…

கடைசி வரை திக்… திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!

Posted by - March 24, 2025 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 முறை சாம்பியன்…

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது SRH அணி

Posted by - May 3, 2024 0
பரபரப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *