பூண்டு விலை… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

324 0

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அன்றாட உணவின் அத்யாவசிய காய்கறிகளான தக்காளி ,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

Garlic Price

இதனையடுத்து மதுரையின் முக்கிய சந்தையான மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இப்பகுதிக்கு வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாலும் விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே விளைச்சல் மிகவும் குறைவு காரணமாக பூண்டின் விலை திடீரென அதிகரித்துள்ளது. 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலைகள், 200 ரூபாய் விலை உயர்ந்து, 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது இதேபோன்று பெரிய பூண்டின் விலை 250 இல் இருந்து 300 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 200 ரூபாய் உயர்ந்து 500 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்படுகின்றது.

மேட்டுப்பாளையம், சத்திரப்பட்டி போன்ற பகுதிகளில் பூண்டின் விளைச்சல் குறைவாக இருப்பதினால் இந்த விலையேற்றம் இருப்பதாகவும் வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.

Related Post

கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Posted by - November 5, 2025 0
“தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு, சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மழை எச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்வோம்” “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று…

“சென்னை மாஸ்டர் பிளான் 3”.. சிட்டியே மாற போகுது! இனி நீர் நிலைகள் அருகே கட்டுமானம் கட்ட கட்டுப்பாடு?

Posted by - December 12, 2023 0
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. இதில் வெள்ளம், புயலில்…

தினமும் கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?

Posted by - November 2, 2023 0
நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் இயற்கை நமக்கு பல்வேறு மூலிகைகளை நமக்கு வழங்கியுள்ளது. அதில் துளசி, கற்பூரவள்ளி போன்றவை பொதுவாக பெரும்பாலான இடங்களில் காணப்படும்…

எம்.ஜி.ஆர்., ஆக முயன்று தோற்ற மு.க. முத்து – தந்தை கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. ஜெ., உதவி

Posted by - July 19, 2025 0
மறைந்த முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி. ஆரை போலவே திரைப்படங்களில் நடித்து பிரபலமாக முயன்று மு.க. முத்து தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. MK Muthu Died: மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Posted by - October 22, 2025 0
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களை மழைநீர் சூழ்ந்ததாலும் விவசாயிகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *