ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் – சமாதானம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்

275 0

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சமாதானமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது :

கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள்.

பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாக இருப்பதனாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாக கருத்துக்கள் தெரிவிப்பதனையும் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி பள்ளிகளுக்கு சென்று கல்விப் பணியாற்றிட வேண்டுமாய் இதன் மூலம் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனதில் ஆசிரியர்கள் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042/- கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது.

கல்வியாண்டின் இறுதிநிலையில் இருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Related Post

அடுத்த ரவுண்டுக்கு ரெடியா.. புயல்? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழை கன்ஃபார்ம்

Posted by - October 22, 2025 0
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமான வலுவடையக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வடமாவட்டங்களில்…

காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி

Posted by - June 30, 2025 0
சிவகங்கையில், அஜித்குமார் என்ற காவலாளி, காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்த விவகாரம் தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சருக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். சிவகங்கையில், காவல்துறை…

சென்னை மாநகரில் மழை நீர் வடியாததற்கான காரணம்?

Posted by - December 4, 2023 0
சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை…

ஊர் எல்லையில் கிடந்த சடலம்!! “காதல் தோல்வியால் உயிரைவிட்ட இளம்பெண்..” காத்திருந்து பழிவாங்கிய தாய் மாமன்..!

Posted by - November 22, 2025 0
மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞரை  சரமாரியாக வெட்டி கொன்ற வழக்கில் 4-பேர் கைது. மேலும் ஒருவருக்கு வலைவீச்சு. அக்கா மகளை காதலித்து திருமணம் செய்யாததால்…

நடிகர் ராஜேஷ் சாவுக்கு காரணம் இவர்தான்.. ராஜேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - May 29, 2025 0
சித்த மருத்துவர் 2 மணி நேரம் பேசிக்கொண்ட நேரத்தை இழுத்தடித்ததே நடிகர் ராஜேஷின் மரணத்திற்கு காரணம் என்று அவரது தம்பி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபலமான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *