ஊர் எல்லையில் கிடந்த சடலம்!! “காதல் தோல்வியால் உயிரைவிட்ட இளம்பெண்..” காத்திருந்து பழிவாங்கிய தாய் மாமன்..!

167 0

மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞரை  சரமாரியாக வெட்டி கொன்ற வழக்கில் 4-பேர் கைது. மேலும் ஒருவருக்கு வலைவீச்சு. அக்கா மகளை காதலித்து திருமணம் செய்யாததால் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலையை அரங்கேற்றிய கும்பல். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (25). எண்ணூர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ரஞ்சித், கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் புதியதாக கார் வாங்கி ட்ராவல்ஸ் நடத்த உள்ளதாக தமது குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.thiruvallur youth  murder case

மேலும் இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அண்மையில் தான் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.இவர் தன் மீது உள்ள வழக்குக்காக, மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு சென்று தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19 -ஆம் தேதி மாலை தமது நண்பர் ஒருவருடன் வெளியே சென்ற ரஞ்சித், இரவு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர். அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. காலை வரையில் ரஞ்சித் வீடு திரும்பாத சூழலில், 20 -ஆம் தேதி காலை தோட்டக்காடு ஊர் எல்லையில் உள்ள தனியார் நிலத்தில் முட்புதரில் உள்ள தண்ணீரில் ரஞ்சித் தலை, கை, கால்களில் வெட்டப்பட்டு ரத்தகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் ரஞ்சித், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மீஞ்சூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரஞ்சித், அதே ஊரை சேர்ந்த ஆர்த்திகா ஶ்ரீ என்ற பெண்ணை காதலித்துவிட்டு பின்னர்  திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள்  தமது நண்பர்களுடன் சேர்ந்து கொலையை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து பெண்ணின் தாய் மாமன் தினேஷ், விஷால், நவீன்ராஜ், விக்னேஷ் ஆகிய 4 -பேரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய உதயா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Post

உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்கணுமா? அப்ப தினமும் ‘இந்த’ உலர் பழத்தை சாப்பிடுங்க…!

Posted by - November 16, 2023 0
அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனைகளுக்கு இடையில், சர்க்கரை நோயின் பாதிப்பு எல்லா மக்களையும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது. 30 வயதை கடந்தவுடன் சர்க்கரை நோய் வந்துவிடுமோ என்ற பயம்…

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.2½ லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரி மீது வழக்குப்பதிவு

Posted by - November 4, 2023 0
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் போலீசார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு…

திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது

Posted by - July 11, 2023 0
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற…

நான் கைதாகவில்லை, நடந்தது இதுதான்.. பிக் பாஸ் தினேஷ் உண்மையை விளக்கி வெளியிட்ட வீடியோ

Posted by - November 14, 2025 0
சீரியல் நடிகர் தினேஷ் தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் பிரபல நடிகை ரச்சிதாவை காதல் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.…

தமிழகத்தில் நடமாடும் போதைப்பொருட்கள் – கொதிக்கும் ஓபிஎஸ்

Posted by - March 2, 2024 0
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாடும் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *