பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் அலட்சியபடுத்திய தமிழக அரசு…பொங்கி எழுந்த இடைநிலை ஆசிரியர்கள்…

196 0

சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி அடுத்தகட்டமாக இன்று (பிப்.29) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனமான ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊதிய முரண்பாட்டைக் களைந்து, சம வேலைக்குச் சம ஊதியம் தரக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னையில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதிமுதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்க மறுத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து எஸ்எஸ்டிஏ இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்ட அறிக்கையில், “ஆசிரியர்களின் மீது பாசம்கொண்ட எங்கள் துறை அமைச்சருக்கு 10 நாட்களாகப் போராடி வரும் எங்களை அழைத்துக்கூட பேச மனமில்லை. ஆனால், போலீஸாரைக் கொண்டு எங்களைக் கைது செய்கின்றனர்.

இது எங்களுக்கு வேதனையை அளிக்கிறது. தமிழக முதல்வர் கொடுத்த இடைநிலை ஆசிரியர்களின் சமநிலைக்கு சம ஊதியம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று (பிப். 29) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

Related Post

விவசாயிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கும்பல்- அதிகாரிகள் போல் நடித்து பணத்துடன் ஓட்டம்

Posted by - July 6, 2023 0
மொடக்குறிச்சி: தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள…

இந்த வருடமும் நாங்க தான்.. சம்பவம் செய்த மாணவிகள்-தேர்ச்சி விகிதம் இது தான்

Posted by - May 8, 2025 0
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட அதிக சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் 12 ஆம்…

ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..

Posted by - June 12, 2025 0
பொன்முடி ஓசி பஸ் என சொன்னது சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் திமுக MLA-ஏ இப்படி சொல்லியிருப்பது எதிர்க்கட்சியினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது. பெண்கள் ஓசி பஸ்ஸில்…

திக்குமுக்காட செய்த தமிழ்நாடு பட்ஜெட்..! எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? பள்ளிக்கல்வித்துறை டாப்..!

Posted by - March 14, 2025 0
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…

இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலினுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்! : வானதி சீனிவாசன்

Posted by - April 10, 2024 0
‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் அனைத்து மதத்தினரின் நலன்களையும் பாதுகாப்பவர்கள். கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் 1500-க்கும் அதிகமான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *