தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டி: அண்ணாமலை தகவல்

295 0

சென்னை: “தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துள்ளது. பாஜகவின் வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். பாஜகவின் சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேலும் ஒரு 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்” என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஒரு மகிழ்ச்சியான செய்தி. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை முடித்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி 39 தொகுதிகளுக்கும் பங்கீடு முடிவடைந்துள்ளது. பாஜகவின் வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். பாஜகவின் சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேலும் ஒரு 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

இந்த 24 வேட்பாளர்கள் பட்டியல் உடன் தலைவர்கள் இன்று புதுடெல்லி செல்ல இருக்கின்றோம். பாஜக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்கள் மற்றும் பாஜக சின்னத்தில் போட்டியிடும் 4 வேட்பாளர்கள் உள்பட 24 பேரின் வேட்பாளர் பட்டியலை இன்று மாலையில் இருந்து எந்தநேரத்திலும் வெளியாகலாம். அதேபோல், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அவர்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அவர்கள் அறிவிப்பார்கள்.பாஜக ஒரு தேசிய கட்சி. ஒரு மாநிலத் தலைவர் இங்கிருந்து வேட்பாளர்களை அறிவிப்பது வழக்கம் அல்ல. எனவே, அதற்கான அனைத்து தகவல்களையும் இங்கிருந்து தலைமைக்கு அனுப்பிவிட்டோம். எங்கள் கூட்டணியில், சுமுகமாக, மகிழ்ச்சியாக, திருப்திகரமாக எல்லோருக்கும் என்ன வேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. அனைவரும் வளர வேண்டும் என்ற அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பங்கீடு முடிந்திருக்கிறது.

தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல் வரவேண்டும் என்றால், அதில் பல கட்சிகள் இருக்க வேண்டும். பல வண்ணங்களும், சின்னங்களும் இருக்க வேண்டும். அனைத்து சமூகத்தில் இருந்தும் தலைவர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான், மக்களுக்கு அந்த கூட்டணியின் மீது ஒரு நம்பிக்கை வரும். திராவிட அரசியலுக்கு மாறுபட்ட அரசியலை பாஜக முன்னெடுக்கிறது. அதற்கான ஒரு பெரிய முயற்சி இந்த 2024 மக்களவைத் தேர்தல். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக மக்கள் 39 தொகுதிகளிலும் மிகப் பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார் அண்ணாமலை.

அப்போது அவரிடம் தமாகா, ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “தமாகாவைப் பொறுத்தவரை 3 இடங்களில் போட்டியிடுகின்றனர். அது தொடர்பாக அவர்கள் அறிவிப்பார்கள். அது குறித்து நான் அறிவிப்பது முறையாக இருக்காது. அதேபோல், ஓபிஎஸ் எப்போது வேண்டுமானாலும் செய்தியாளர்களைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, அது தொடர்பாகவும் நான் கூறுவது சரியாக இருக்காது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பார்” என்று அவர் கூறினார்.

 

 

 

Related Post

மாதம்பட்டி ரங்கராஜ் மறுமண வழக்கில் வந்த அதிரடி தீர்ப்பு… ஜாய் கிரிசில்டா போட்ட வைரல் பதிவு

Posted by - November 4, 2025 0
மாதம்பட்டி ரங்கராஜ் தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமா படங்களை தாண்டி சமையல் தொழில் மூலம் தான்…

அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவம்… தேசிய கணித தினம் இன்று…

Posted by - December 22, 2023 0
கணிதம் ஒரு சுவாரஸ்யமான பாடமாகும். நீங்கள் அதை விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும், வாழ்வில் குழப்பங்களை தடுத்து, ஒரு தெளிவு தருகிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கணிதம்…

நைட் தூங்குறதுக்கு முன்னாடி ‘இந்த’ பழத்தை சாப்பிட்டா போதுமாம்… நிம்மதியான தூக்கம் வருமாம்..!

Posted by - December 20, 2023 0
உங்களின் உறக்கத்தின் தரம் நீங்கள் உறங்குவதற்கு முன் உண்ணும் உணவைப் பொறுத்தது. படுக்கைக்கு முன் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

Posted by - November 29, 2022 0
துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு கோரி சந்திப்பு. தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழக…

பிறந்தது டிசம்பர்… இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வர உள்ள புதிய விதிகள்.!

Posted by - December 1, 2022 0
பலர் தங்களது முக்கியமான பணிகளை அடுத்த மாதம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அப்படி முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை ஒத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *