கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு

264 0

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசிற்கு எதிராக பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார். அதில் மக்களிடையே பிரபலமான அவர், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்ததுடன் அண்மையில் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார்.

இதற்கிடையே அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாமல் காவல்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளையும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சவுக்கு சங்கர் பேசி அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் இன்று காலை  கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் தேனியில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறை உயர் அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் விசாரணைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டார்.

News18

அப்போது தாராபுரம் அருகே சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் சிறிய விபத்துக்குள்ளானது. இதில் சவுக்கு சங்கருக்கு லேசான காயம் மட்டுமே என்பதால், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று வாகனத்தில் கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.

Related Post

மன்சூர் அலிகானிடம் விரைவில் விசாரணை: சம்மன் அனுப்பி அழைக்க இருப்பதாக போலீசார் தகவல்

Posted by - November 22, 2023 0
சென்னை: நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில்…

ரூ.1000 மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு.. இணையதளம் முடக்கம்.. தவிக்கும் பெண்கள்!

Posted by - September 22, 2023 0
 மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இணையதளம் முடங்கியுள்ளதால் விண்ணப்பதாரர்கள்…

வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

Posted by - July 24, 2025 0
கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்,…

திருவாரூர், நாகையில் திடீர் மழை – விவசாயிகள் கவலை

Posted by - February 28, 2023 0
நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *