arunips

ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ். யார் இந்த மகேஷ்வரி?

126 0

DVAC ARUN IPS: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக இருந்த அருண் ஐபிஎஸ் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

DVAC ARUN IPS: திமுகவிற்கு நெருக்கமான அருண் ஐபிஎஸ்க்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பதவி வழங்கப்பட்டது ஆரம்பத்திலேயே கடும் அதிர்வலைகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ்:

திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தனர். தேர்தலின் போது கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு, அவர் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக தவெக அளித்த புகாரும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால், தேர்தல் முடிந்ததும் ஆட்சி அமைத்த விஜய், லஞ்ச ஒழிப்புத்துறை எனும் முக்கியமான பிரிவிற்கான இயக்குனராக அருண் ஐபிஎஸ்-ஐ நியமித்தார். இது சொந்தக்கட்சிக்குள்ளாகவே சலசலைப்பை ஏற்படுத்தினாலும், கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தால் இந்த முடிவு எடுக்கப்படதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான் நியமிக்கப்பட்ட இரண்டே மாதங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதவி பறிக்கப்பட்டு, காவல்துறை அகாடெமி இயக்குனர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பல முக்கிய காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடுமையாக விமர்சித்த நீதிமன்றம்

அருணின் பதவி பறிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.  குறிப்பாக நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனமும் ஒன்றாகும். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குண்டாஸில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அதுதொடர்பான விசாரணயில், ஊழல் தடுப்பு அமைப்பின் நம்பகத்தன்மையையும் நேர்மையையும் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அருணின் பதவி உயர்வு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தது.

அதன்படி, முன்னாள் தலைவர்களான சி.வி. நரசிம்மன் மற்றும் சி.எல். ராமகிருஷ்ணன் ஆகியோரை உதாரணமாகக் காட்டி, ”டி.வி.ஏ.சி இயக்குநர் அலுவலகம் பாரம்பரியமாக சிறந்த தகுதியும் நேர்மையும் கொண்ட அதிகாரிகளால் வகிக்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் பதவி வகித்த காலத்தில் அவர்களுக்கு எதிராக சிறு குற்றச்சாட்டு கூட முன்வைக்கப்படவில்லை. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டியது போல, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் பதவிக்கு மிகச் சிறந்த நற்பெயர் கொண்ட தொழில் வல்லுநர்கள் தலைமை தாங்க வேண்டும்” என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.

திமுகவிற்கு எதிரான ஆவணங்கள் கசிந்தனவா?

தவெக அரசின் நிர்வாகம் தொடர்பான முக்கியமான உள்விவகார முடிவுகள் கசிந்ததிலும் அருணிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக எ.வ. வேலு வீடுகளில் நடந்த சோதனை மற்றும் அவரை விசாரணைக்கு உட்படுத்துவது ஆகியவற்றில், பல தகவல்கள் கசிந்ததகாவும் கூறப்படுகிறது. இதேபோன்று ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள கே.என். நேரு உள்ளிட்டோர் தொடர்பான முக்கிய ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இருந்து கசிந்ததாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இதன் விளைவாக தான் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்திலேயே தமிழ்நாடு காவல் பயிற்சி அகாடமிக்கு அருண் ஐபிஎஸ் மாற்றப்பட்டுள்ளார்.

யார் இந்த மகேஷ்வரி?

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனராக ஐஜி சி.மகேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். காவல்துறை மீது இருந்த ஆர்வத்தால், டிஎன்பிஎஸ்சி க்ரூப் 1 தேர்வெழுதி, 1997ஆம் ஆண்டு நேரடியாகத் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கினார்.  சிறப்பான பணிக்காக 2003-ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும, 2006-ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணி அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றார். கரூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். சென்னை மாநகர காவல்துறையின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களின் இணை ஆணையராக சட்டம்-ஒழுங்கைத் திறம்படக் கையாண்டவர். சேலம் சரக டிஐஜியாகவும் சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார்.

Related Post

தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டி: அண்ணாமலை தகவல்

Posted by - மார்ச் 21, 2024 0
சென்னை: “தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துள்ளது. பாஜகவின் வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். பாஜகவின் சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேலும்…

தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர்…

Posted by - ஜூலை 2, 2025 0
சிவகங்கை காவல்நிலைய லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் விசாரணையில் நடந்த கொடூரத்தை கண்ணீருடன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…
Gemini Generated Image gb5pfsgb5pfsgb5p

“எத்தகைய வெட்கக்கேடு?” – விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

Posted by - மார்ச் 20, 2026 0
தூத்துக்குடி: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பின்னணி தூத்துக்குடி மாவட்டம்…

ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை… ஒட்டுமொத்த இயக்கமே இபிஎஸ் பின்னால் இருக்கு ; கடம்பூர் ராஜு!!

Posted by - ஜனவரி 20, 2024 0
ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை என்றும், ஒட்டுமொத்த இயக்கமே எடப்பாடியார் பின்னால் உள்ளது என தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.…

திக்குமுக்காட செய்த தமிழ்நாடு பட்ஜெட்..! எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? பள்ளிக்கல்வித்துறை டாப்..!

Posted by - மார்ச் 14, 2025 0
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன