BSNL போதும்டா சாமி.. இனி ரூ.18-க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1 ஜிபி டேட்டா..

153 0

பிஎஸ்என்எல் சிம் கார்டு கொடுங்க, உடனே 4ஜி சேவைக்கு மாத்துங்கனு ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் சொல்ல வைக்கும்படி அந்த நிறுவனத்தின் திட்டங்கள் இருக்கின்றன. மற்ற நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு திட்டங்களை வைத்திருப்பது மட்டுமல்லாமல், யாரும் நம்ப முடியாதபடியும் சில திட்டங்களை கொடுக்கின்றன. அப்படி வெறும் ரூ.18 விலைக்கு கிடைக்கும் ரீசார்ஜ் திட்டத்தின் விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த பிஎஸ்என்எல் மலிவு விலை திட்டத்தில் (BSNL Cheapest Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ 18 திட்ட விவரங்கள் (BSNL Rs 18 Plan Details): பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மட்டுமே வாய்ஸ் கால்கள் அல்லது டேட்டாவுக்கு மட்டும் பிரத்யேகமாக திட்டங்கள் இருக்கின்றன. இருப்பினும், சில திட்டங்களில் 2 சலுகைகளும் சேர்த்து கொடுக்கப்படுகின்றன. இந்த திட்டமும் அப்படித்தான். வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே கிடைத்தாலும், டேட்டாவையும் பேக் செய்துள்ளது.

ஆகவே, இந்த பிஎஸ்என்எல் வாய்ஸ் வவுச்சர் (Voice Voucher) ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls) செய்து கொள்ள கிடைக்கிறது. மேலும், எஸ்டிடி கால்களும் (STD Calls), ரோமிங் வாய்ஸ் கால்களும் (Roaming Voice Calls) வருகிறது. இந்த விலைக்கு இதுவே நல்ல சலுகையாகும். ஆனால், இந்த திட்டத்தில் டேட்டா சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, 1 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்த முடியும். இந்த 1 ஜிபி முடிந்தாலும் அடுத்த நாள் வரையில் 40 கேபிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy Data) கிடைக்கிறது. ஆகவே, உங்களிடம் வெறும் ரூ.18 இருந்தால் போதும், மாத ரீசார்ஜ் செய்யும் வரையில், இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.இதேபோல கூடுதல் வேலிடிட்டி கொண்ட வாய்ஸ் கால்கள் திட்டம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு மேலும் 2 திட்டங்கள் இருக்கின்றன. இந்த வாய்ஸ் திட்டங்களும் அடிமட்ட விலைக்கே கிடைக்கின்றன. அதேபோல வாய்ஸ் மட்டுமல்லாமல், டேட்டாவையும் கஸ்டமர்களுக்கு கொடுக்கின்றன. ரூ.59 மற்றும் ரூ.87 விலைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.பிஎஸ்என்எல் ரூ 59 திட்டம் (BSNL Rs 59 Plan) ஆனது அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை கொடுக்கிறது. இந்த வாய்ஸ் கால்களை 7 நாட்கள் வேலிடிடிக்கு செய்து கொள்ளலாம். அதேபோல 7 நாட்களுக்கும் தினசரி ஒதுக்கீட்டில் டேட்டா சலுகை கிடைக்கும். ஆகவே, தினமும் 1 ஜிபி டேட்டாவை (1 GB Data) பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 7 ஜிபி டேட்டா (7 GB Data) மொத்தமாக கிடைக்கிறது. ஒரு வாரத்துக்கு வெறும் ரூ.60 மதிப்பில் திட்டம் வேண்டுமானால், இதைவிட பெஸ்ட் திட்டம் கிடையாது. இதைவிட கூடுதல் வேலிடிட்டிக்கு அடுத்த திட்டமான ரூ.87 விலைக்கு கிடைக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த பிஎஸ்என்எல் ரூ 87 திட்டத்தின் (BSNL Rs 87 Plan) சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினசரி டேட்டா (Daily Data) சலுகை கிடைக்கிறது. ஆனால், வேலிடிட்டி 14 நாட்களுக்கு கிடைக்கும். ஆகவே, 2 வாரங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை எந்த நெட்வொர்க்கிலும் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் 14 ஜிபி டேட்டாவையும் பயன்படுத்தலாம். இதற்கும் 40 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கிடைக்கிறது.

Related Post

பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த டாக்டர்கள்- ஒரு வருடத்திற்கு பிறகு அகற்றம்

Posted by - April 19, 2023 0
திருப்பதி: மாநிலம் ஜகித்யாலா பகுதியை சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ கடந்த ஆண்டு பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நவ்யா ஸ்ரீக்கு சுகப்பிரசவம் நடக்காததால் டாக்டர்கள்…

கேபிள் டிவி முடிஞ்சது.. Jio ஆபர்.. 800 டிவி சேனல்.. குவியுது கூட்டம் ரூ.1000-க்கு.. 12 ஓடிடி.. வாய்ஸ் கால்கள்!

Posted by - December 4, 2024 0
#jio #jioairfiber #jiosetupbox #jiotv #jiocinema #ipl2025 ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்துக்கு ஆஃபர்களை கொடுக்க சொல்லித் தரவா வேண்டும் என்று நினைக்கும்படி ரூ.1000-க்கும் கம்மியான…

போலீஸ் உடையில் இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி என்ஜினீயரிங் மாணவியுடன் உல்லாசம்- வீடியோ எடுத்து மிரட்டிய நாடக நடிகர்

Posted by - August 11, 2023 0
திருப்பதி: கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 19 வயது மாணவி படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் யமனூரா (வயது 22) என்பவர் போலீஸ்…
mp senthil

விஸ்வரூபம் எடுத்த கோமியப் பிரச்னை – மன்னிப்பு கோரிய திமுக எம்.பி.! என்ன நடந்தது?

Posted by - December 6, 2023 0
அந்த சொல்லை உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை, தவறான பொருள் தருவதால், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக கூறிய திமுக எம்.பி. 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்…
techers protest

இந்திய அளவில் “X” தளத்தில் டிரெண்டிங்: #TeachersProtest

Posted by - January 2, 2026 0
“சம வேலைக்கு சம ஊதியம்” – 8 நாட்களாக சென்னை போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்** சென்னை:தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், “சம வேலைக்கு சம…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *